Bigg Boss Tamil: தான் எங்கே தோல்வி அடைந்தேன் என்பது குறித்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ரட்சகன் பட இயக்குனர் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9:
கடந்த வாரம் முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆக போகிறது. பிக் பாஸ் சீசன் 9- ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடலிங் துறையைச் சேர்ந்த அரோரா சின்கிளேர், ராப் பாடகர் FJ , வி.ஜே பார்வதி , கொரியன் பாய் துஷார், குக் வித் கோமாளி கனி, வேலைக்காரன் சீரியல் நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, குக் வித் கோமாளி கெமி, பிகில் பட நடிகை ஆதிரை, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத்,விமானப் பணிப் பெண் வியானா, சின்ன மருமகள் சீரியல் நடிகர் பிரவீன், மீனவ பெண் சுபி,திருநங்கை அப்சரா,ஸ்டாண்ட் அப் காமெடியனான விக்ரம், மகாநதி சீரியல் நடிகர் கம்ரூதின், அகோரி கலையரசன் என மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இதை மட்டும் பண்ணாதீங்க:
இதில் ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வலி மிகுந்த கதையை சொல்லி வருகின்றனர். அந்த வகையில் ரட்சகன் திரைப்பட இயக்குனர் பிரவீன் காந்தி மிகவும் வேதனையுடன் பேசினார். “ நான் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தேன். நாலாவதாக நடிக்க வேண்டும் என்று ஒரு படம் பண்ணினேன். அந்த படத்தின் பெயர் துள்ளல். நிறையபேர் என்னிடம் வந்து நீ திறமைக்கு இன்னும் பத்து படங்கள் கூட பண்ணலாம்.
துள்ளல் என்ற படத்தில் நானே ஹிரோவாக நடித்தேன்.அந்த கனவில் ஒரு அடி எடுத்து வைத்த உடன் நீங்கள் தான் எல்லாமே என்ற திமிர் வரும் அதை நீங்கள் காலடியில் வைக்க கற்றுக்கொண்டால் உலகம் போற்றும் நபராக நீங்கள் மாறுவீர்கள்”என்று என்று பிரவீன் காந்தி பேசினார்.
அவரது பேச்சை பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் மிக அமைதியுடன் கேட்டு கைதட்டியது குறிப்பிடத்தக்கது.