தனக்கு மகள் வயது உள்ள அரோராவுக்கு இயக்குனர் பிரவீன் காந்தி பிக் பாஸ் இல்லத்தில் காதல் தூண்டில் போட்டதாக நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9:
கடந்த வாரம் முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியிக் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆக போகிறது. பிக் பாஸ் சீசன் 9- ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தினம் தினம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே நெட்டிசன்களின் ட்ரோல் வளையத்தில் சிக்கியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி.
என்ன செய்தார் பிரவீன் காந்தி:
ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரவீன் காந்தி ஜோடி என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அதே போல், 2007 ஆம் ஆண்டு துள்ளல் என்ற படத்தையும் இயக்கி நடித்தார். இதனைத்தொடந்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் பிக் பாஸ் இல்லத்தில் தற்போது தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்து விட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதாவது மாடல் அழகியான அரோராவும் பிக் பாஸ் இல்லத்தில் இருக்கிறார். இச்சூழலில் தான் அரோராவுக்கு காதல் தூண்டிலை பிரவீன் காந்தி வீசி உள்ளார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
அரோராவுக்கு காதல் தூண்டில்:
அதாவது நேற்றைய எபிசோடில் அரோராவிடம் "இந்த சீசன் பெருசா போகணும்னா, நீயும் நானும் லவ் பண்ணணும், அதுவும் நான் உன்னை லவ் பண்ண கூடாது. நீ என்னை வெறித்தனமா லவ் பண்ணணும், நான் வேண்டாம்னு, உன்னைக் கண்டுக்கவே கூடாது. ஆனால் நீ என் பின்னாடியே சுத்திக்கிட்டே இருக்கணும். அப்படி பண்ணா இந்த சீசன் TRP எகிறிடும்.
இதை நான் ஏன் சொல்றேன்னா ஒரு டைரக்டர் எனக்குத் தெரியும்”என்று கூறியிருக்கிறார். என்ன தான் இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியா இருந்தாலும் தனக்கு மகள் வயது உள்ள பெண்ணிடம் இப்படித்தான் பேசுவாரா என்று பிரவீன் காந்தியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.