விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 14 பேர் கொண்ட போட்டியாளர்களுடன் பெரும்பாலான போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது 6 பேர் கொண்ட போட்டியாளர்களுடன் மட்டுமே இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணமும் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற டாஸ்க் ஒன்றின்போது அபிராமிக்கும், தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அபிராமி தாமரையைப் பார்த்து நீங்கள் நடிக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
இதனால், கடுப்பான தாமரை அபிராமியை மூஞ்சை உடைத்துவிடுவேன் என்று கூறியதுடன், டாஸ்க் என்ற பெயரில் பாலா பின்னாலே சுற்றிக்கொண்டிருக்கிறாய் என்று கூறியுள்ளார். தாமரையின் வார்த்தையால் மனம் உடைந்த அபிராமி மிகுந்த மனவேதனையுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க : துறு துறு பானுப்ரியா ரொம்ப அமைதியா மாறுனாங்க.. இவ்வளவு கஷ்டமா? இப்படியும் ஒரு கதை..
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 பேருடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வனிதா, தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன் உள்ளிட்ட பலரும் வெளியேறிவிட்டனர். வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்த சிலரும் வெளியேறிவிட்டனர். சுருதியும் டாஸ்க் ஒன்றில் வெற்றி பெற்று ரூபாய் 15 லட்சத்துடன் வெளியேறினார்.
கமல்ஹாசன் வெளியேறியதால் பிக்பாஸ் வீட்டில் இதற்கு மேல் இருக்க விருப்பமில்லை என்று வனிதா வெளியேறினார். உடல்நலக்குறைவு காரணமாக சுரேஷ் சக்கரவர்த்தி மருத்துவர்களின் பரிந்துரைப்படி வெளியேறினார். அடுத்தடுத்து பலரும் வெளியேறிய நிலையில், அபிராமியும் வெளியேறியதால் இந்த போட்டியின் வெற்றியாளர் என்பது விரைவில் தெரிய வர உள்ளது.
மேலும் படிக்க : 13 Years of Ayan : பளபளக்குற பகலா நீ.. வெளியாகி 13 ஆண்டுகள்... ட்விட்டரில் கொண்டாடப்படும் அயன்..
மேலும் படிக்க : Watch video : டயட்ல இருக்கேன்.. விஜய் சேதுபதி டயட்டை பத்தி அவரே சொல்றாரு மக்களே.. வைரல் வீடியோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்