நான் சின்ன வயசுல இருந்தே எங்க அம்மாகிட்ட அடிவாங்கினது மட்டுமில்லாமல், எங்க அம்மா என்ன போலீஸ் கிட்ட அடி வாங்க வச்சது தான் இன்னும் என் வாழ்க்கைல கஷ்டமாக இருக்குன்னு பகிர்ந்துள்ளார் பிக்பாஸ் நதியா சங்..


பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக 11 நாளை எட்டியுள்ளது. வழக்கம் போல ஆட்டம், பாட்டம், சண்டைகள் என எதற்குமே பஞ்சம் இல்லை. இந்த சீசனில் பலர்  மிகவும் பிரபலமாக இல்லாத நிலையில் தான் கடந்த இரண்டு வாரகாலங்களாகப் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்சிய விஷயங்கள் மற்றும் சோகக் கதைகளை கூறிவருகின்றனர். அந்த வகையில் நேற்றைய எபிசோட்டில் மலேசியா மாடல் நாடியாசங் தனது வாழ்வில் நடந்தவற்றைக் கதையாக கூறினார்.. சிறு வயது முதல் தனது அம்மா மீது கொண்ட வெறுப்பு, பட்ட துயரங்கள் அனைத்தையும் பேசினார். அதில் என் இயற்பெயர் அரு ஜெயலட்சுமி என்றும், தான் 14 வயதில் இருந்தே வேலை செய்துவந்தேன். என்னுடைய அம்மா ரொம்ப ஸட்ரிக்ட் எனவும்,  எப்ப பார்த்தாலும் என்னை அடிக்கத்தான் செய்வார். மேலும் அம்மாவின் மேல் வெறுப்பு வந்தது என்றால் போலீஸ்காரங்க கிட்ட என்னை அடி வாங்க வச்சது தான் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். 





இதோடு மட்டுமின்றி 14 வயது முதல் நான் வேலைக்கு சென்றுவிட்டேன் எனவும் ஹோட்டலில் தான் வேலைப்பார்க்கும் போது தான் என்னை காதலித்ததோடு, என் அம்மாவை எதிர்த்து என்னை திருமணம் செய்தார் என்னுடைய கணவர். மேலும் என் அம்மா இதுவரை என்னை கொடுமைப்படுத்தினாங்க.. ஆனால் எனக்கு எந்த கோபமும் இல்லை. அப்படி என்னை ஒதுக்கியதால் தான், யார் என்றே தெரியாத நான் என்னுடைய வாழ்க்கையில் இப்போது ஜெயித்துக்கொண்டு இருக்கிறேன் எனவும், என்னோட ஒவ்வொரு வெற்றிக்கும் எனது தாய் அளித்த கொடுமைகள் தான் காரணம் என கூறினார். மேலும் என் வாழ்க்கையில் மனிதர்கள் கொடுக்காதப் பெருமையை ஒரு ஆப் கொடுத்தது என்று கூறியிருந்தார். இவருடைய இந்தக் கதைக்கு 16 டிஸ்லைக்குள் வந்துள்ளது. இதனையடுத்து வழக்கம் போல இவர் தெரிவித்த கருத்துகளுக்கு கமெண்ட்ஸ்களையும் இமான் மற்றும் பவனி , தாமரைச்செல்வி பேசினர். தொடர்ந்து வழக்கம் போல பிக்பாஸ் வீட்டிற்குள் அனைத்து போட்டியாளர்களும் அவர்களது பணியை மேற்கொண்டனர்.  இதோடு இந்த வாரம்   அபினவ், அபிசேக், அக்சரா,சின்னப்பொண்ணு,சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, பெர்ரி, மதுமிதா, நாடியா சங், நிரூப், பிரியங்கா, ராஜூ,சுருதி, வருண் ஆகியோர் நாமினேசன் லிஸ்டில் உள்ளனர்.