விஜய் டிவி பிக்பாஸ் ஷோவில் எபிசோட் 27 இன்றைக்கு நடக்க இருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்புகளின்படி சின்னப்பொண்னுதான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சண்டைகளின் அர்த்தமே எவிக்‌ஷன்தான் என கமல் சொல்வதுடன் தொடங்குகிறது ப்ரோமோ 2. குழப்பமான மனநிலையில் இருப்பதாக அக்‌ஷராவைப் பற்றி ப்ரியங்கா சொன்னதும், எல்லாரையும் கஷ்டப்படுத்தும் ப்ரியங்கா என பெயர் கொடுத்தார் அக்‌ஷரா. நிரூப் அக்‌ஷராவை குற்றம்சாட்டியதும், உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் என கொந்தளிக்கிறார் அக்‌ஷரா.


ப்ரோமோ 2 உங்கள் பார்வைக்கு :






ப்ரோமோ 1 உங்கள் பார்வைக்கு..






இன்றைக்கு முதல் ப்ரோமோவே கலக்கல்தான். ஆண்டவரின் சேட்டைகள் அப்படி. “வீட்டு ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோம். ஸ்னாக்ஸ் ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோமா. ப்ரியங்கா Is saved" என்கிறார். ஒரு நிமிடம் ப்ரியங்காவுக்கு மயக்கமே வந்துவிட்டது. பம்மல் கே சம்பந்தம் பிஜிஎம்முடன் சுபமாய் முடிந்தது ப்ரோமோ 1.