Biggboss Tamil 5 | Episode 29


முதலில் மற்றவர்களின் கேரக்டரைப்பற்றி எல்லாரும் சொல்லும் சிண்டுமுடி வேலைகளை வழக்கம்போல தொடங்கிவிட்ட பிக்பாஸ், இன்றும் சில விளையாட்டுகளை வைத்தார். பின்பு விளையாட்டின்போது எல்லாரின் ஆடைகளை விமர்சித்த தாமரைச்செல்வியைத் திருத்தி ஆடையை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என சொன்னார் கமல். ஆக்டிவிட்டி ரூமுக்கு நாமினேட் ஆனவர்களை வரச்சொன்ன கமல், ஒவ்வொருவராய் காப்பாற்றி கடைசியில் சின்னப்பொண்ணுவுக்கு எலிமினேட் ஆன உண்மையைச் சொன்னார். சின்னப்பொண்ணு வெளியேறியது உண்மையிலேயே எல்லாருக்கும் கலக்கத்தை கொடுத்ததை உணர முடிந்தது. 














தென்றல் வெண்பா ஆயிரம் என்னும் புத்தகத்தைப் பரிந்துரைந்தார் கமல். சின்னப்பொண்ணுவின் ஃபேர்வெல் வீடியோவுடன், அவருக்கு ஊக்கம் சொல்லி வழியனுப்பினார்