பிக்பாஸ் சீசன் 5ன் வீக்கெண்ட் எபிசோடுக்கான இன்றைய தினத்தின் 3-வது புரோமோ வெளியாகியிருக்கிறது. உடை பற்றி கருத்துகள் நிறைய இங்க வந்துச்சு. சிபி சொல்வதற்கு முன்பு தாமரைதான் அடக்கம் என்கிற வார்த்தையை உபயோகப்படுத்தினார் நினைவுபடுத்துகிறார் கமல். ஏன் அவர்கள் உடை பிடிக்கவில்லை. அதில் என்ன பிரச்சினை எனக் கேட்கிறார். படத்தில்தான் இவர்கள் அணிவது போன்ற உடைகளைப் பார்த்திருக்கிறேன் என்கிறார் தாமரைச் செல்வி. இந்தக் கோவம் தன்மானக் கோவம் கிடையாது, குழப்பத்தில் வரும் கோவம்தான் என கமல் சொன்னதும், ஆமாஞ்சாமி போடுகிறார் தாமரைச் செல்வி. 







29-ஆம் தேதி எபிசோடில், கிராமத்தாரா நகரத்தாரா பட்டிமன்றம் நடந்தது. அதில் ஆளாளுக்கு பல விஷயங்களைப் பேசியது செம்ம எண்ட்டர்டெய்ன்மெண்ட். அதில் உணவு விஷயத்தில் கிராமத்தாரும், பிக்பாஸ் ஆட்டம் புரிந்து விளையாடுவதில் நகரத்தாரும் இசையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமத்தாரா, நகரத்தாரா பட்டிமன்றம் போய்க்கொண்டிருக்கும்போது நாணயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார் சுருதி. தாமரை பொங்கியெழுந்து மீண்டும் சாமியாடத் தொடங்கிய பின்புதான் அனைவரும் அமைதியானார்கள். தாமரையை அடக்கி வாசிக்கச் சொல்லி ராஜு கொடுத்த அட்வைஸ் ஸ்வீட்டான விஷயம். 


தவிர சுருதி அணியும் உடை பற்றி தாமரைச் செல்வி பேசியதும் ஆடியன்ஸ்களுக்கு கொஞ்சம் எதிர் ரியாக்‌ஷன்களைக் கொடுத்தது. உடை அவரவர் விருப்பம் சிலர் கமெண்ட் செய்தனர். சிபி, தாமரைச் செல்வியைக் கண்டித்த விதம் ஆடியன்ஸ்களிடமிருந்து ஹார்ட்க்களை அள்ளிக் கொடுத்தது. 


விஜய் டிவி பிக்பாஸ் ஷோவில் எபிசோட் 27 இன்றைக்கு நடக்க இருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்புகளின்படி சின்னப்பொண்னுதான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சண்டைகளின் அர்த்தமே எவிக்‌ஷன்தான் என கமல் சொல்வதுடன் தொடங்குகிறது ப்ரோமோ 2. குழப்பமான மனநிலையில் இருப்பதாக அக்‌ஷராவைப் பற்றி ப்ரியங்கா சொன்னதும், எல்லாரையும் கஷ்டப்படுத்தும் ப்ரியங்கா என பெயர் கொடுத்தார் அக்‌ஷரா. நிரூப் அக்‌ஷராவை குற்றம்சாட்டியதும், உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் என கொந்தளிக்கிறார் அக்‌ஷரா.