பிக்பாஸ் ஸ்டார்ட் ஆன ஜோஷில் ப்ரோமோக்களே களைகட்டுகிறது. சோஷியல் மீடியாவில் மீம்ஸ் கலெக்ஷன் ஸ்டார்ட் ஆகிறது. ப்ரோமோக்களில், பிக்பாஸ் அனுப்பிய கடிதத்தை உதவி இயக்குனரும், நடிகருமான ராஜூ ஜெயாமோகன் சக போட்டியாளர்கள் முன்னிலையில் படிக்கிறார். அப்போது யூடியூப் பிரபலமான அபிஷேக், சுதந்திரபாடகியான ஐக்கியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராஜூவின் அறிவிப்பு ஏதோ ஒருவகையில் அவருக்கு தொந்தரவானதாக தெரிகிறது. அபிஷேக்-ஐக்கியின் பேச்சும் ராஜூவுக்கு தொந்தரவாகியுள்ளது. இதனால் அறிவிப்பின் நடுவே, ‛இங்கே பாரு... அப்புறமா கூட்டிட்டு போய் லவ் பண்ணு...’ என கூறி, அவர்களை தடுத்து அறிவிப்பை சொல்வதுபோல காட்டியிருக்கிறார்கள். கலாட்டா பண்றதுலதான் பிக்பாஸை அடிச்சுக்க முடியாதே. ப்ரோமோ வெட்டி வெட்டி ஒட்டி வெச்சிருப்பாரு.
‛என் தலைவன் வருவான்...’ என படுக்கை அறையில் அபிஷேக் கூறுவதும், ‛சரிகமபதநீ சொல்லித்தாறேன் ஒருவாட்டி...’ என்ற பருத்திவீரன் பாடலை ஒரு குழுவினர் பாடுவதும், விதிமுறைகளை படிக்கும்போதே, பிக்பாஸு இதே விதிமுறையை எத்தனை முறை தான் சொல்லுவீங்க... என ராஜூ சலித்துக்கொள்வதுமாய் ஜாலியாக முடிகிறது இரண்டாவது ப்ரமோ!
மூன்றாவது ப்ரோமோ இன்னும் ஹைப் ஜாஸ்தி. பஞ்சாயத்து தலைவர், அம்மா, பாட்டி, விரல், டெட் பாடி என கம்பி கட்டுகிற கதையெல்லாம் போட்டு ஒரு பேய்க்கதை சொல்கிறார் ராஜு மோகன். பிக்பாஸ் கண்டெஸ்டண்ட்ஸுக்கு அல்லு இல்லாமல் போகிறது. ஆபீஸ் போனவர்கள், மற்ற வேலைகளுக்கு போனவர்கள் எல்லாம் இன்றைக்கு கரெக்டாக பிக்பாஸ் ஆரம்பிக்கும் டைமில் ஆஜராகி விடுவார்கள் என சரியாக கணிக்கிறது விஜய் டிவி.
இருக்கு. இன்னைக்கு இருக்கு..