Bigg Boss 5 Tamil Promo: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5ன் முதல்நாள் இல்ல ஒளிபரப்பு இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல் ப்ரமோ வெளியான நிலையில், இரண்டாவது ப்ரமோ சற்று முன் வெளியானது. இன்று வீட்டை கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி குழுக்கள் பிரிக்கும் பணி நடைபெற உள்ளது. அதற்கான தலைவர்கள் தேர்வும் அது மட்டுமின்றி புதிய போட்டியாளர்கள் என்பதால் அவர்களுக்கான விதிகளை விளக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
அதன் படி பிக்பாஸ் அனுப்பிய கடிதத்தை உதவி இயக்குனரும், நடிகருமான ராஜூ ஜெயாமோகன் சக போட்டியாளர்கள் முன்னிலையில் படிக்கிறார். அப்போது யூடியூப் பிரபலமான அபிஷேக், சுதந்திரபாடகியான ஐக்கியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராஜூவின் அறிவிப்பு ஏதோ ஒருவகையில் அவருக்கு சொந்தரவானதாக தெரிகிறது. அபிஷேக்-ஐக்கியின் பேச்சும் ராஜூவுக்கு தொந்தரவாகியுள்ளது. இதனால் அறிவிப்பின் நடுவே, ‛இங்கே பாரு... அப்புறமா கூட்டிட்டு போய் லவ் பண்ணு...’ என கூறி, அவர்களை தடுத்து அறிவிப்பை வெளியிடுகிறார். ‛என் தலைவன் வருவான்...’ என படுக்கை அறையில் அபிஷேக் கூறுவதும், ‛சரிகமபதநீ சொல்லித்தாறேன் ஒருவாட்டி...’ என்ற பருத்திவீரன் பாடலை ஒரு குழுவினர் பாடுவதும், விதிமுறைகளை படிக்கும் போதே, இதே விதிமுறையை எத்தனை முறை தான் சொல்லுவீங்க... என ராஜூ சலித்துக்கொள்வதுமாய் முடிகிறது இரண்டாவது ப்ரமோ!
மேலும் பிக்பாஸ் செய்திகளுக்கு...
பிக்பாஸ் தொடர்பான மேலும் செய்திகளுக்கு...