ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்த ஆண்டு 5வது தொடரை நேற்று தொடங்கியது. இதோ அதோ என பரபரப்பை எகிற வைத்த அந்த நிகழ்ச்சியில், இந்த முறை 18 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். பெண்கள் பெரும்பான்மையாக சென்றுள்ள பிக்பாஸ் வீட்டின் முதல்நாள் காட்சிகள் இன்று ஒளிப்பரப்பாக உள்ளது. இதற்கிடையில் சற்று முன் அதன் முன்னோட்ட காட்சிகள் வெளியாகின. அதில் வழக்கம் போல பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் டாஸ்க் மற்றும் 5 வகை பணிகளுக்கான தலைவர்கள் தேர்வு ஆகியவை நடைபெற உள்ளது. இதற்காக 5 பேர் கொண்ட தலைவர்கள் குழு லீவிங் ஏரியாவில் வந்தனர்.


 


அப்போது உதவி இயக்குனரும், நடிகருமான ராஜூ ஜெயாமோகன் தான் பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியின் தலைவராக விரும்புவதாக தெரிவித்தார். அப்போது அவருக்கு எதிரில் நின்றிருந்த தொகுப்பாளினி ப்ரியங்கா... ‛இது தான் ரொம்ப ஈஸியான வேலை.... என வழக்கமான பாணியில் சிரித்து பேசிய அவர், திடீரென கோஷம் ஒன்றை எழுப்பத் தொடங்கினார். ‛நாங்கெல்லாம் ஒன்னாவோம்.... கக்கூஸ் கழிவி ப்ரண்ட் ஆவோம்...’ என கத்த, அப்படியே அனைத்து போட்டியாளர்களும் சற்று நேரம் உறைந்து போயினர். இன்றைய நிகழ்ச்சியில் இன்னும் கூட சுவாரஸ்யத்தை ப்ரியங்கா தரப்பு தரும் என்பது அந்த ப்ரொமோ மூலம் தெரியவருகிறது. 






பிக்பாஸ் தொடர்பான மேலும் செய்திகளுக்கு...