Biggboss Tamil 5 Day 10 Promo 3





விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், பத்தாவது நாளுக்கான முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இன்று நாடக கலைஞர் தாமரைச் செல்வி தனது கதையை பகிர்ந்து கொள்கிறார். ”என் பையன நான் பார்க்கவே இல்லை. அவன தேடி போனேன். ஆனா, அவன் அங்கையே இருந்திருக்கிறேனு சொல்லிட்டான். என் புள்ளைய பார்த்து நாலு மாசமாச்சு. என் பையன ரொம்ப பிடிக்கும். போன்ல பேச மாட்டான், என்ன பார்க்க மாட்டான், நான் தப்பு பண்ணிட்டனு நினைக்குறான். அவன காப்பாத்தானும்னுதான் இங்க வந்தேன்” என கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாய் பேசிக் கொண்டிருக்கிறார் தாமரைச் செல்வி. அவரது கதையை கேட்டு கொண்டிருந்த மற்ற போட்டியாளர்களின் கண்களும் நீர் வடிய முதல் ப்ரோமோ முடிவடைந்தது.


பிக்பாஸில் தாமரைச் செல்வி:


நாடக கலைஞராக இருக்கும் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு முத்து சிற்பி பாட, தாமரை செல்வி நடனமாடினார். “நான் கிட்டத்திட்ட 22 வருஷமா இந்த துறையில் இருக்கேன். என்னுடைய குழந்தைகளோட என்னால இருக்கவே முடியாது. காலையில 5 மணிக்கு போயிட்டு மறுநாள் 11 மணிக்குத்தான் வருவேன்” என்று கூத்து கலைஞர்களின் கஷ்டத்தை பகிர்ந்துக்கொண்டார். 


இப்போது வெளியாகியுள்ள 3-வது ப்ரோமோவில், “உன் பையன் உன்கிட்ட வரத்தான் போறான். நீ ஜெயிச்சே ஆகணும். உன் கதையை சத்தமா சொல்லியிருக்க நீ” என அவருக்கு தைரியமூட்டினார்.