பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகை விசித்ரா, சக போட்டியாளரான நிக்ஸனிடம் வாக்குவாதம் செய்த காட்சிகள் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


 பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நடப்பு  சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ராம் என பலரும் பங்கேற்றுள்ளனர். 


இதனிடையே  பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா தொடர்ந்து பிரச்சினையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே பெண்களின் உடை குறித்து பேசிய அவர், அனன்யாவிடம் உடம்பில் போடப்பட்ட டாட்டூவை காட்டச் சொல்லி வற்புறுத்தியதாக வீடியோ வெளியானது. தொடர்ந்து நேற்று நிக்ஸனிடம் சமையல் விஷயத்தில் சண்டைக்கு சென்றார். இதுதொடர்பான காட்சிகள் நேற்று எபிசோடில் ஒளிபரப்பானது. 


பிக்பாஸ் வீட்டில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் முட்டைக்குழம்பு செய்ய முட்டையை சக போட்டியாளர்கள்  நேரடியாக உடைத்து ஊற்றியதை பார்த்த விசித்ரா, இது கன்றாவியா இருக்கும். எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காது. முட்டையை அவித்து குழம்பு செய்யுமாறு சொன்னார். இதைக்கேட்டு பதில் சொன்ன நிக்ஸன், “நீங்கள் முன்னாடியே சொல்லுங்க. பாதி வேலை முடிந்த பிறகு இப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என தெரிவித்தார். 


உடனே  நீங்க எப்படி பண்ணப்போறீங்கன்னு என்கிட்ட விவாதிக்கவே இல்லையே என விசித்ரா சொல்ல, ‘நீங்க தான் இரவு சமைக்க வர மாட்டேன்னு சொன்னீங்க.இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லை. முட்டை குழம்பு சரியா பண்ணிடலாம்” என நிக்ஸன் பதிலளித்தார். உடனே கிச்சன் ஏரியாவில் இருந்த அவரை அழைத்த விசித்ரா,  அங்க இருந்தே கத்தாத என சொல்லி விட்டு முட்டை குழம்பு குறித்து விவரிக்கிறார். உடனே எனக்கு தெரியாது என நிக்ஸன் சொல்லிவிட்டு செல்கிறார்.


தொடர்ந்து பேசும் விசித்ரா, “எல்லோருக்கும் பிடிச்ச மாதிரிதான் சாப்பாடு செய்ய வேண்டும் என சொல்ல, நாம சமைச்சது எல்லோருக்கும் பிடிக்கலையே’ என நிக்ஸன் பதிலுக்கு பேச அங்க ஒரு சண்டை ரெடியானது. வாயை கண்ட்ரோல் பண்ணி பேசு நிக்ஸன் என விசித்ரா கூறினார். நான் தப்பா எதுவும் சொல்ல என தன்னிலை விளக்கம் கொடுத்தார் நிக்ஸன். அவரை மறித்த யுகேந்திரன் விசித்திராவிடம், ‘இங்கே உங்க சாப்பாட்டை யாரும் குறை சொல்லவில்லை. ஒவ்வொருவரும் விதவிதமாக கேட்கிறார்கள். அது செய்யமுடியாத பட்சத்தில் பிடிக்காவிட்டாலும் சாப்பிடுகிறார்கள்’ என விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் விசித்திராவை பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.