பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா ரவியின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஆக கொண்டாடப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வந்தாச்சு பிக்பாஸ் சீசன் 7 


சின்னத்திரை ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் வழக்கம்போல தொகுத்து வழங்கி வருகிறார். சுமார் 110 நாட்கள் வரை செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூக வலைத்தளங்கள் களைக்கட்டும். அதுவும் இம்முறை களமிறக்கப்பட்டிருக்கும் போட்டியாளர்களை பார்த்தால் வேற லெவலில் ரசிகர்களுக்கு பிடித்த சீசனாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை,  சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ,  ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அனன்யா ராவ், மணி சந்திரா,  யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா,  ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார்,  வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.  பலதுறை சார்ந்த போட்டியாளர்கள் இருப்பதால் தினம்தோறும் எபிசோட் போர் அடிக்காமல் உள்ளது. 


பிக்பாஸ் vs ஸ்மால் பாஸ் 


பிக்பாஸ் வீடு இந்த முறை இரண்டாக பிரிக்கப்பட்டு விட்டது. பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்றழைக்கப்படுகிறது இந்த வீடுகள். ஒவ்வொரு வாரமும் கேப்டனை கவர தவறிய 6 போட்டியாளர்கள் இந்த வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். விதிகளை மீறியவர்களும் இங்குதான் அனுப்பப்படுவார்கள். அவர்கள் எந்த வித டாஸ்க்கிலும் பங்கேற்க முடியாது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் சமையல் வேலையை இவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். பாத்ரூம் மற்றும் பிக்பாஸ் வீடு கிளீனிங் வேலைகள் டாஸ்க் மூலம் இந்த வீட்டில் யார் பார்க்க வேண்டும் என நிர்ணயிக்கப்படுகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பிறந்தநாள் 






இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் முதல் பிறந்தநாள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் யூட்யூபரான பூர்ணிமா ரவிக்கு கொண்டாடப்பட்டுள்ளது. அவர் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக பிக்பாஸ் வீட்டிலேயே கேக் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவர் முன்னிலையிலும் கேக் வெட்டி தனது பிறந்தநாளை பூர்ணிமா ரவி கொண்டாடினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியை தரக்குறைவாக விமர்சித்த கூல் சுரேஷ்.. விரைவில் போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா?