Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருணை அடுத்து ஜனவரி 2-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் சஞ்சீவ் எலிமினேட் செய்யப்பட்டார்.


கடந்த வாரம் நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 90 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 7 போட்டியாளர்களும் இந்த வாரம் போட்டியிட்டு அடுத்த வாரத்திற்கு முன்னேற வேண்டும். இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில், இப்போதே போட்டியில் இருந்து வெளியேற நினைக்கும் போட்டியாளர், நிர்ணயிக்கப்பட்ட பணத்தை எடுத்து கொண்டு வெளியேறலாம். இந்த டாஸ்க்கில், முதலில் அமீர் வெளியேற இருப்பது போன்ற ப்ரொமோ வெளியானது. அதனை அடுத்து இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரொமோவில், சிபிதான் வெளியேறி இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.


வெற்றி பெறு வேண்டுமென தனக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதாக குறிப்பிடும் சிபி, போட்டியில் இருந்து விலகிவிட முடிவு செய்வதாக பேசி இருக்கிறார். ப்ரொமோவில் காண்பிக்கபப்டும் இந்த காட்சிகள், வெளியாகி இருக்கும் தகவல்கள்படி சிபிதான் வெளியேறி இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.


ப்ரொமோ:3









பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 7 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், நிரூப்


ப்ரொமோ:2












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்