Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருணை அடுத்து ஜனவரி 2-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் சஞ்சீவ் எலிமினேட் செய்யப்பட்டார்.


கடந்த வாரம் நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 90 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 7 போட்டியாளர்களும் இந்த வாரம் போட்டியிட்டு அடுத்த வாரத்திற்கு முன்னேற வேண்டும். இந்நிலையில், வாரத்தின் இரண்டாம் நாளான இன்று பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக எண்ட்ரி தருகிறார் நடிகர் சரத் குமார். கையில் பெட்டியுடன் வந்தவர், 3 லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகை காண்பிக்கிறார். போட்டியில் இருந்து பாதியில் வெளியேற விரும்புவர்கள், 3 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு வெளியேறலாம். இறுதியில் வெற்றியாளர் ஒருவரே, எனவே போட்டியாளர்கள் சிந்தித்து செயல்படுங்கள் என சரத் கேட்டுக்கொண்டார். இதனால், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே குழப்பம் ஆரம்பமாகி உள்ளது. 


ப்ரொமோ:3






பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 7 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், நிரூப்


ப்ரொமோ:2









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்