Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய்யை அடுத்து டிசம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அக்‌ஷரா, வருண் என இருவரும் டபுள் எலிமினேட் செய்யப்பட்டனர்.


பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இந்த வாரம் ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர். இதில், இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதியில்லாத ஒருவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து நிரூப்பை தேர்வு செய்திருக்கின்றனர். இந்நிலையில், ‘Ticket to Finale’ டாஸ்க்கின் கடைசி போட்டி நடைபெற்றிருக்கிறது. இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் கடைசி போட்டியில் சிபியும், அமீரும் போட்டியிடுகின்றனர். டாஸ்க்கை வென்று இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாய் முன்னேறப்போவது யார் என்பது இன்று தெரிந்துவிடும். 


அதனை அடுத்து வெளியான இரண்டாவது ப்ரொமோவில், பிக் பாஸ் தொடரில் பங்கேற்றதில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தை ஒவ்வொரு போட்டியாளரும் பகிர வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்திருக்கிறார். இந்த டாஸ்க்கில் பேசிய ப்ரியங்கா, “நான் ஒரு எமோஷனல் பெர்சன். ஒரு விஷயம் உன்னோடதுனா, அது கண்டிப்பா உங்கிட்ட இருக்கும். உங்கிட்ட இருந்து போயிடுச்சுனா, உன்னோடது இல்லை. திரும்ப உங்கிட்ட வந்துச்சுனா, அது உன்னோடது, திரும்ப வரலைனா, அது என்னிக்குமே உன்னோடது கிடையாது. இதுதான் நான் கத்துக்கிட்ட பாடம்” என அவரும் குழம்ப, போட்டியாளர்களையும் குழப்ப பேசி முடிக்கிறார். 


மேலும் படிக்க: Chennai Rain LIVE: சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: நாளை வரை கனமழை எச்சரிக்கை!





ப்ரொமோ:2















பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 8 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், சஞ்சீவ், நிரூப்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்