Rain News LIVE: 26 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
Chennai Rain News LIVE Updates in Tamil: சென்னையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையின் தொடர்ச்சியாக இன்றைய சூழல் குறித்த லைவ் அப்டேட்.
தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிமை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 48 மணிநேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம்..
வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமான அளவை விட தமிழ்நாட்டில் கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை டிஜிபி அலுவலக பகுதியில் 24 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மேற்கு மாம்பழம், கோயம்பேடு, பள்ளிக்கரணை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னை மயிலாப்பூர், மாம்பலம், திநகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது
நேற்று இரவு முழுவதும் பெய்த மழை, காலையில் இல்லாத நிலையில், தற்போது சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் சென்னையில் 100 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
2015 ம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழை பதிவாகியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவிற்கு அதிக மழையாகும்.
தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை அசோக் நகர், கே.கே.நகர், போரூர் வழித்தடங்களுக்கு பதில் மாற்று பாதையை பயன்படுத்த வலியுறுத்தல்.
மழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் உள்ள மேம்பாலங்களில், கார்களை அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
வழக்கமாக தமிழ்நாட்டில் 9 சதவீதம் மழை, டிசம்பர் மாதத்தில் பெய்யும். ஆனால் ,இம்முறை 6 சதவீதம் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. ஆனால், நவம்பரில் அதிக மழை கொட்டியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட இந்த முறை 59 சதவீதம் மழை பெய்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ‛பேய் மழை பெய்திருக்கிறது. திருச்சியில் இருந்ததும், நேரியாக சென்று ஆலோசனை நடத்தினேன். நீரை வெளியேற்றும் பணிகள் இன்று முடிந்துவிடம். வானிலை அறிக்கை பெறுவதில் இயந்திரங்கள் மாற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை. மீண்டும் அதை நினைவூட்டுகிறேன். மீண்டும் தேங்கிய இடத்திலேயே மழை நீர் தேங்க காரணம், 10 ஆண்டுகளாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அடுத்த மழை வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம்,’’ என்றார்.
சென்னையில் நேற்று பெய்ததைப் போல கனமழை இருக்காது என வானிலை மைய இயக்குனர் புவியரசன் தகவல்
சென்னையில் நேற்று பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆய்வு நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நடந்து வரும் ஆய்வில், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை. நாளை வரை இந்நிலை தொடரும் என்று அதன் பின் குறையும் என்றும் அறிவிப்பு
புதுச்சேரியில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை 12:30 மணி வரை தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை தொடரும் என அறிவிப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
புதுச்சேரியில் மதி்யம் 12:30 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை தி.நகர் மேற்கு மாம்பலம் பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணியின் காரணமாகவும், மின் வயர்களை ஒழுங்குபடுத்தும் விதமாகவும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
மாங்காடு பகுதியில் மழை நீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன
நேற்று பெய்த கனமழையானது, சென்னை மெரினாவில் 24 செ.மீ., அளவிற்கு பதிவாகியுள்ளது
காட்டுமன்னார் கோவில் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சற்று முன் தொடங்கிய மழை, பரவலாக பெய்து வருகிறது
புதுச்சேரியில் தற்போது கனமழை தொடங்கியுள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.
ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
சென்னை சிவசாமி சாலையில் தேங்கிய மழை நீரில் விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டு பாலசுப்பிரமணியன் என்பவர் பரிதாபமாக பலியானார்.
செம்பரம்பாக்கத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை கனமழை காரணமாக நீர் தேங்கியுள்ள துரைசாமி, ஆர்பிஐ, மேட்லி சுரங்கப்பாதைகள் மற்றும் ரெங்கராஜபுரம் இருசக்கர சுரங்கபாதைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.
சென்னையில் கனமழை பெய்த நிலையில் பாதிப்புகள் குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு நடத்தினார்
சென்னையில் கனமழை பெய்த நிலையில் பாதிப்புகள் குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு நடத்தினார்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் அந்த மழை பெய்யும்
14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களும் அடங்கும்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொட்டித்தீர்த்த கன மழை காரணமாகவும், இன்றும் மழை தொடரும் என்பதால்ல சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
சென்னையில் நேற்ற செய்த கனமழையானது அதிகபட்சமாக எம்சிஆர் நகரில் 21 செ.மீ அளவில் பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ., அளவில் மழை பதிவானது
கொட்டித்தீர்த்த கன மழை காரணமாகவும், இன்றும் மழை தொடரும் என்பதால்ல சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
Background
Chennai Rain Today LIVE Tamil News
சென்னையில் நேற்று மதியம் முதல் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. இன்றும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மழைநீரால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அப்டேட் விபரங்களை இந்த லைவ் பிளாக் பகுதியில் அடுத்தடுத்து அறியலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -