Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமானை அடுத்து டிசம்பர் 19-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அபினய் எலிமினேட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரத்தின் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்று தாமரைச்செல்வி தலைவரானார். அதனை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது.
அக்ஷரா, சிபி, நிரூப், ராஜூவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் பாவனியின் சொந்தங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து, ப்ரியங்காவின் அம்மாவும், சகோதரரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது. அதற்கான ப்ரொமோ இன்று வெளியானது.
மற்ற போட்டியாளர்களின் உறவினர்களும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபோதே கொண்டாடி, கலாய்த்து, அழுது, மகிழ்ந்து உணர்ச்சிகளை வெளிப்படுதினார் ப்ரியங்கா. இது சமூக வலைதளத்தில் டிரெண்டானது. இந்நிலையில், ப்ரியங்காவின் உறவுக்காரர்களே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும்போது அவர் சந்தோஷத்தில் குதித்து ஓடிய காட்சிகளை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
ப்ரொமோ:2
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்