Bigg Boss 5 Tamil: ‛அமீரால உன்னோட இமேஜ்...’ - பாவனியை எச்சரித்த உறவினர்!

அக்‌ஷரா, சிபி, நிரூப், ராஜூவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் பாவனியின் சொந்தங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

Continues below advertisement

Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமானை அடுத்து டிசம்பர் 19-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அபினய் எலிமினேட்டாகி வெளியேறினார்.

Continues below advertisement

இந்நிலையில், இந்த வாரத்தின் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்று தாமரைச்செல்வி தலைவரானார். அதனை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது.

அக்‌ஷரா, சிபி, நிரூப், ராஜூவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் பாவனியின் சொந்தங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. அப்போது, பாவனிக்கு அட்வைஸ் செய்யும் அவரது உறவினர், “ஒருத்தர்னால உன்னோட பெயர் சற்று வித்தியாசமாக வெளியாகின்றது” என எச்சரிக்கிறார். அதற்கு பாவனி, “அமீரா?” என கேட்க, ”ஆமாம்” என்று அவர் தலையாட்ட, ”நான் சீரியஸா சொல்லிட்டேன். நீ நீயா இரு, நான் நானாக இருப்பேன்” என பாவனி ரிப்ளை செய்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் எபிசோட்களில், பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த சம்பவம் வைரலானது. பிக்பாஸ் வீட்டில் காதல் புதிதல்ல. எனினும், சர்ச்சையான இந்த சம்பவம் இன்று வரை பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. 

மேலும் படிக்க: ‛வலி என்றால்.. காதலின் வலி தான்... வலிகளில் பெரிது...’ மீண்டு வந்த யாஷிகாவை தேடி வந்த நிரூப்!

ப்ரொமோ:1

மேலும் படிக்க: ‛உலகமே அழிந்தாலும்... அப்பவும் ஆர்டர் பண்ணுவோம்...’ நாடி நரம்பெல்லாம் ஊறிய பிரியாணி வெறி; ஸ்விகி தரும் டேட்டா!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement