Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.


இந்நிலையில், 102வது நாளான இன்றைய எபிசோடுக்கான ப்ரொமோக்கள் வெளியாகி உள்ளன. கடைசி வாரம் என்பதால் எலிமினேட்டாகி வெளியேறிய போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடைசி வார கொண்டாட்டம் முழு வீச்சில் நடந்து வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களை அடுத்து, விஜய் டிவியின் சிறப்பு விருந்தினர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். நடிகர் ரஞ்சித் நடிக்கும் சீரியல் குழு பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களுடன் உரையாடி உள்ளனர். அப்போது கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில், பிக் பாஸ் வீட்டின் ஃபேவரைட் போட்டியாளருக்கு அனைவரும் ரோஜாப்பூவை தர வேண்டும். அதிக ரோஜாப்பூக்களை பெறுபவர் பிக் பாஸ் வீட்டின் ஃபேவரைட் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்படுகிறது. இதில், அதிக ரோஜாப்பூக்களை பெற்று ராஜூ, பிக் பாஸ் வீட்டின் ஃபேவரைட் போட்டியாளராக தேர்வு செய்யப்படுகிறார். 


மேலும், பிக் பாஸ் சீசனின் வெற்றியாளர் ராஜூ எனவும், இரண்டாம் இடத்தில் ப்ரியங்கா, பாவனிக்கு மூன்றாம் இடமும், நிரூப் நான்காம் இடமும் அமீர் ஐந்தாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டின் கடைசி வார டாஸ்க்கின்போது பேசிய ராஜூ, “இந்த வாய்ப்பு எனக்கு வாழ்க்கையா மாறப்போகுது. உங்க வீட்ல இப்படி ஒரு பையன் இருக்கனும்னு நெனச்சிருந்தீங்கனா அதுவே எனக்கு சந்தோஷம்” என நெகிழ்ச்சியாகப் பேசி வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 5 போட்டியாளர்கள்: ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப்


ப்ரொமோ:1









ப்ரொமோ:2












ப்ரொமோ:3

































ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்