விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருண், சஞ்சீவ், இறுதியாக தாமரை என மக்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம் எலிமினேட் செய்யப்பட்டனர்.


கடந்த 2 வாரம் முன்பு நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் தற்போது 102 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருந்த போட்டியாளர்களில், சிபி 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.



இந்தநிலையில், பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டியில், நிரூப் நந்தகுமார், பிரியங்கா தேஷ்பாண்டே, அமீர், ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ரெட்டி உள்ளிட்ட ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் 105 நாட்கள் வீட்டிற்குள் தங்கிய பிறகு வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். 


பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டிக்கான தேதி, இடம், நேரம் ஆகியவை பின்வருமாறு :


தேதி மற்றும் நேரம் : 


பிக் பாஸ் 5 தமிழின் இறுதிபோட்டியானது ஜனவரி 16, 2021 (ஞாயிறு) அன்று மாலை 6 மணி முதல் மாலையில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. 


எப்படி பார்ப்பது ? 


பிரபல தமிழ் சேனலான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் கிடைக்கும். 


சிறப்பு விருந்தினர்கள் யார் யார் ?


கொரோனா பரவல் காரணமாக பிக் பாஸ் 5 தமிழின் இறுதி எபிசோடில் சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இருப்பினும், இதுவரை பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர்கள் மற்றும் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் இடம்பெறலாம். அதேபோல், கடந்த பிக் பாஸ் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் பங்கேற்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண