Bigg Boss 5 Tamil Day 66: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை அடுத்து டிசம்பர் 5-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் மீண்டும் அபிஷேக் எலிமினேட்டாகி வெளியேறி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான்று நடைபெற்ற தலைவருக்கான போட்டியில் அமீர் வெற்றி பெற்று தலைவராக அறிவிக்கப்பட்டபோது பாவனி நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை தட்டிப்பறித்து கொண்டார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 66வது நாளுக்கான முதல் ப்ரொமோ வெளியாகி உள்ளது.
நேற்று முதல், பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்கி ‘அரசியல் மாநாடு’ நடத்தி வருகின்றனர். இதில், அபினய், அமீர், பாவனி, ப்ரியங்கா ஆகியோர் ஒரு குழுவாக பிரிந்து பிரச்சாரம் நடத்துகின்றனர். அப்போது வீட்டில் இருப்பவர்களிடம், இப்படி இருக்க வேண்டும், அடுத்து வருபவர்களுக்கு போதுமான அளவு சாப்பாடு உள்ளதா என தெரிந்து சாப்பிட வேண்டும் என அவர் கமெண்ட் செய்கிறார். இதனால், கடுப்பாகும் ஹவுஸ்மேட்ஸ் நிரூப், சிபி ப்ரியங்காவை கடுகடுத்து கொள்கின்றனர்.
ப்ரொமோ:1
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்