பிக்பாஸ் சீசன் 5ன் வீகெண்ட் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. இன்று எலிமினேஷன் உள்ள நிலையில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை மக்கள் தீர்ப்பாக அளித்திருக்கிறார்கள் என கார்டை கார்டைப் பார்க்கிறார்.
மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவது தன் வழக்கம்.. அதை நம்பிக்கொண்டிருக்கிறேன்.. என்றும் நம்புவேன் (ஒரு வேளை அரசியல் பதிவா இருக்குமோ) என்கிறார் கமல். கடைசியாக சின்னபொண்ணு மற்றும் அபிஷேக் லிஸ்ட்டில் உள்ள நிலையில் அபிஷேக் வெளியேற்றப்பட்டதாக நேற்றே சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இன்று 1-வது ப்ரோமோவில், நேராவே சொல்லிடறேன். யார காப்பாத்துவாங்கன்னு எதிர்பாக்குறவங்கன்னு எதிர்பார்க்குறீங்க என்றார் கமல்ஹாசன். ஐக்கி பெர்ரி காப்பற்றப்பட்டதாக அறிவிக்கிறார் கமல்
2வது புரோமோபில், கமல் சார் கிட்ட எதோ கேக்கணும்னு சொன்னியே அவர் கிட்ட கேளு. நான் அங்க பதில் சொல்லிக்கிறேன் என்கிறார் ப்ரியங்கா. என் காயினை நீ வாங்கி வெச்சுக்கிட்டு எனக்கு அது எதுக்காகன்னு சொல்லலையே. இது ஒரு ஃப்ரெண்டுக்கு பண்ற விஷயமா என கொதிக்கிறார் ப்ரியங்கா. அதுக்கு நான் பொறுப்பில்ல என பதில் சொல்கிறார் நிரூப். இப்படி சூடாக முடிந்தது ப்ரோமோ 2.