பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளரும் நடிகருமான ஆரி அர்ஜுனன் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



5 சீசன்களாக பிக்பாஸ் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 சீசன்களுக்கும் நடிகர் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 5 வீட்டில் முதல் போட்டியாளராக கானா பாடகராக இசை வாணி நுழைந்தார். இரண்டாவது போட்டியாளராக சீரியல்களில் நடித்த ராஜு நுழைந்தார். மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா களமிறங்கினார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்,  ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளார்.  நான்காவது போட்டியாளராக தொகுப்பாளர் மற்றும் யூடியூப்பரான அபிஷேக் ராஜா சென்றார். அடுத்ததாக நமிதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி, பாடகி சின்னபொண்ணு, நடியா சங், மலேசிய மாடலான வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்‌ஷரா, ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி, நிரூப் என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்நுழைந்தனர்.


2 எபிசோடுகள் இதுவரை முடிந்துள்ளன. எல்லாரும் ஒருவருடன் ஒருவர் நன்றாக பேசத்துவங்கியுள்ளனர். நேற்றைய எபிசோடில், பாத்திரம் கழுவுறது மட்டும்தான், நீங்க எடுத்திருக்கீங்க இல்லையா என கேட்கும் சின்னப்பொண்ணுவிடம், டம்ப்ளர்லாம் நீங்களே கழுவிக்கணும் என மொக்க ஜோக் அடிக்கிறார் ராஜூ.சமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் சின்னப்பொண்ணு. எல்லார் முகத்திலும் அப்படி ஒரு பிரகாசம்.. அப்பாடா சோத்துக்கு பிரச்சனையில்ல என்பதுபோல் தலையாட்டி சிரிக்கிறார் ப்ரியங்கா. உடனே செம்ம எனர்ஜியாக அடுத்த ஸ்லோகன். “நாங்கள்ளாம் ஒன்னானோம், சாப்ட்டு சாப்ட்டு குண்டானோம்”. பவனி ஹவுஸ் க்ளீனிங் எடுத்துக்கொண்டார். இப்படி சண்டை எதுவும் இல்லாமல் ஜாலியாக முடிந்தது நேற்றைய எபிசோட்.


இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஸ்பெஷல் பயணத்தின் ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்கிறது. மக்கள் அளித்த அன்பையும் ஆதரவையும் ஒருபோதும் மறக்கமுடியாது. நிறைய நல்ல விஷயங்கள் வரவுள்ளன என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் கடைசியாக வெற்றி பெற்று பரிசைப் பெறும்போது மகிழ்ச்சியுடன் ஆரியின் மகள் கைத்தட்டி அவரது கன்னத்தில் முத்தமிடுவது வரையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.