பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி மற்றும் வனிதாவிற்கு இடையே வாக்குவாதம். சூடுசூடுபிடிக்கும் பிக்பாஸ் ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஷோக்கள் அனைத்தும் சீசன்1, சீசன் 2 என எண்ணிக்கையை அடிக்கிக் கொண்டே போகும். அப்படி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ள ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான பல போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இப்படி பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்தவுடனே பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகிவருகிறது.





இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சல சலப்புகளுக்குக் காரணமாக வனிதா, தாமரை, ஜூலி, ஸ்னேகன், சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பல பலர் பங்கேற்றுள்ளனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். குறிப்பாக வனிதா அக்கா என்ன செய்யப்போறாங்க? என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான், வனிதாவிற்கும், தாமரைச் செல்விக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் வனிதா இருவருக்கும் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டுவந்தது. இந்நிகழ்ச்சியில் தாமரை செல்வியின் உடன் அவ்வப்போது பாலாஜி முருகதாஸும் சேர்ந்துக்கொள்வார். 


தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது தாமரைக்கும் வனிதாவிற்கும் இடையே சண்டை முற்றி இருவரும் ஒருவர் ஒருவரை தரக்குறைவாகப் பேசி சண்டை போட்டுக்கொள்கின்றனர். இன்று வெளியான ப்ரோமோவில் வனிதா மற்றும் தாமரை செல்வியும் பிக்பாஸ் பொம்மைகளை வைத்து ஒரு டாஸ்க் கொடுப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் தாமரை வனிதாவின் பொம்மையை லாபகராமாக எடுத்து விடுவதாகவும் அதனால் ஆத்திரமடைந்த வனிதா தாமரையை பிராடு என்று திட்டுகிறார்.





இதனையடுத்து தாமரை , என்ன மயித்துக்கு என்ன ப்ராடுனு சொல்ற என வனிதாவிடம் சரிக்கு சரி பதில் பேசி அசிங்கப்படுத்துகிறார். இந்த இருவரும் பேசும் சத்தத்தினால் பிக்பாஸ் வீடே அதிரும் அளவில் இருந்ததோடு மற்ற போட்டியாளர்களே என்ன நடந்திட்டு இருக்குன்னு ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுக்குறித்த ப்ரோமோவை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் இவ்வளவு நாள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சம்பவம் நிகழப்போகிறது என சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை மற்றும் சச்சரவுகளை ஏற்படுத்துவதற்காகவே வனிதா மற்றும் தாமரை  இருவரையும் தாயரித்து உள்ளே அனுப்பியிருந்தார்கள் என்றும் நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். குறிப்பாக பிக்பாஸ் அல்டிமேட்டி ல் இருக்கும் போட்டியாளர்கள் வனிதாவிடம் வாயை கொடுத்து வம்பிழுத்துக்கக்கூடாது என பயந்து ஒதுங்கி இருக்கும் நிலையில், தாமரை கொஞ்சம் கூட பயமில்லாமல் சரி மல்லுக்கு சண்டை போடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.