மக்களிடம் மிகவும் பிரபலமாக ஒரு ரியாலிட்டி ஷோதான் பிக்பாஸ். சமீபத்தில் சீசன் 5 முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாக 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிவருகிறது. இதில் கடந்த 5 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். 


குறிப்பாக சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமே இல்லாத பல போட்டியாளர்கள் களம் கண்டுள்ள நிலையில் அதற்கேற்றால் போல்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் சில நேரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லை தெரியாமல் மீறி வருவதாக ரசிகர்களிடையே வாங்கிக் கட்டிக்கொள்கிறது. அப்படி ஒரு சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளது பிக்பாஸ் அல்டிமேட். இந்த சர்ச்சைக்கு தாமரையும், அனிதாவுமே காரணமாகியுள்ளனர்.






 


என் வயிற்றில் பிக்பாஸ் லிட்டில் பாஸ்..


காமெடி என்ற பெயரில் போட்டியாளர்கள் எல்லைமீறி வருவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். அது ஆமாம் என்பதுபோல, பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள அனிதா, பிக்பாஸின் லிட்டில் பாஸ் என் வயிற்றில் வளர்கிறது எனக் கூற அங்கிருக்கும்  போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். மேலும் அனிதாவும், தாமரையும் சேர்ந்து ஜூலியை பிக்பாஸின் மனைவி என்பதும், உங்க மனைவி ரொம்ப மோசம் என்று பிக்பாஸிடம் போட்டுக்கொடுப்பதும் என பேசுகின்றனர். 


காமெடியாக இந்த சம்பவங்கள் நடந்தாலும் இது அனைவருக்குமே காமெடியாக இருக்கவில்லை என பிக்பாஸ் ரசிகர்கள் சிலரே பதிவிட்டு வருகின்றனர். காமெடி என்ற பெயரில் போட்டியாளர்கள் எல்லைமீறுவது நகைச்சுவையாக இல்லை என சிலர் பதிவிட்டுள்ளனர். இதெல்லாம் ஒரு எண்டெர்டெய்ன்மெண்ட் தான்.. இதை சீரியஸாக்க வேண்டாமென்றும் சிலர் பிக்பாஸூக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.








>> Sharanya Turadi | திடீர்னு ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க.. மனசு உடைஞ்சிடுச்சு..ஆனா.. வைதேகி காத்திருந்தாள் சரண்யா துராதி பகீர்..