Simbu BB Ultimate Host: ''நானே எதிர்பார்க்கல''.. புதிய பிக்பாஸாக களமிறங்கும் சிம்பு! எதிர்பார்ப்பை எகிற வைத்த ப்ரோமோ!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக சிம்பு களமிறங்கியுள்ளார்

Continues below advertisement

பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகினார். கமல் விலகியதை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கப்போவது யார்  என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ரம்யா கிருஷ்ணனா? அரவிந்தசாமியா, சரத்குமாரா என்ற பல யூகங்கள் இருந்த நிலையில் அனைத்து யூகங்களையும் பொய்யாக்கி சிம்புன் களமிறங்கியுள்ளார்.

Continues below advertisement

Also Read | Valimai Review: வலிமையாக வந்துள்ளதா வலிமை? போனியாகுமா போனி கபூர் வியூகம்... எடுபட்டதா அஜித் முயற்சிகள்? உண்மையான வலிமை விமர்சனம் இதோ

பிக்இது தொடர்பான ப்ரோமோவை ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. மாஸாகவும் க்யூட்டாகவும் ப்ரோமில் வரும் சிம்பு, எதிர்பார்கலல? என ரசிகர்களிடம் கேள்வி எழுப்புகிறார் சிம்பு. சில நொடிகள் கழித்து நானே எதிர்பார்க்கல எனச்சொல்லி சிரிக்கிறார் சிம்பு. புது தொகுப்பாளர் நிகழ்ச்சியை எப்படி கொண்ட செல்ல போகிறார் என பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்

உலக பிரசித்தி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் ஐந்து சீசன்களை முடித்திருக்கிறது. தமிழின் ஐந்து சீசன்களையும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஐந்து சீசன்களுக்கும் கமல்ஹாசனே நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இடையில் கமல்ஹாசன் விலகுவதாகவும், வேறு சில நடிகர்கள் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாயின. அப்போது கமல்ஹாசன் அதை மறுத்து, ஐந்து சீசன்களையும் தானே தொகுத்து வழங்குவதையும் அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே உறுதிப்படுத்தினார். ஐந்து சீசன்கள் முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவம் ஒளிபரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இறுதி நிகழ்வின் போதே மேடையில் கமல்ஹாசன் உறுதிப்படுத்தினார். அத்துடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான லோகோவையும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் பல அல்டிமேட்டான சம்பவங்கள் நடைபெற்று களைகட்டிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு முழு நேர ட்ரீட்டாகவும் இருந்து வருகிறது

Continues below advertisement