பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இனி அவர் படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகினார். அவருக்கு பதில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.


மீதம் இருக்கும் ஐந்து வாரங்களுக்கான நிகழ்ச்சியை, ஒவ்வொரு வார இறுதியிலும் தொகுத்து வழங்க இருக்கிறார் சிம்பு. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட்டில் பல அல்டிமேட்டான சம்பவங்கள் நடைபெற்று களைகட்டிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு முழு நேர ட்ரீட்டாகவும் இருந்து வருகிறது. அந்த வரிசையில், பிக் பாஸ் சீசன் 5-ல் நடந்த ஒரு பரபரப்பு சம்பவத்தை பற்றி பிக் பாஸ் அல்டிமேட்டில் விவாதம் நடந்திருக்கிறது. 


பிக் பாஸ் கடைசி சீசனின் இறுதிக்கட்டம் வரை எட்டிய பாவனி, அமீர் குறித்த சம்பவம்தான் அது. வைல்ட் காட்ர்ட் எண்ட்ரியான அமீர், பாவனி மீது காதல் கொண்டாதாக சொல்லப்பட்டது. பின்பு, இருவரும் முத்தம் கொடுத்து கொண்ட சம்பவம் பேசு பொருளானது. இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அனிதா பாவனியை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில், “பாவனியெல்லாம் என்ன விளையாட்டு விளையாடினார். அவரெல்லாம் மூன்றாவது இடத்திற்கு வந்தார். பிக் பாஸில் அமீரை லவ் பண்ணதை தவிர வேற என்ன செய்தார். அவரது ரசிகர்களால்தான் அவர் ஃபைனல்ஸ் வந்தார்” என தெரிவித்திருக்கிறார்.






இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமீர் பேசி இருக்கிறார். அதில், “எதுவும் செய்யாமல் யாரும் இறுதிப்போட்டிக்கு வர முடியாது. தன்னம்பிக்கையாக நின்று கடைசி வரை கேம் ஆடியது பாவனி மட்டும்தான்” என தெரிவித்திருக்கிறார். அமீர் தனக்கு ஆதரவாக பேசியதை பார்த்து பாவனி, அமீருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண