Bigg Boss Tamil Season 9: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் - 9 இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது. அந்த வகையில், கடந்த 8 சீசன்களில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
முத்துக்குமரன் ஜெகதீசன் (சீசன் 8 வெற்றியாளர்)
கடந்த 2023 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான ’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முதலில் அங்கீகாரம் பெற்றார் முத்துக்குமரன். பின்னர் பிக் பாஸ் சீசன்-8ல் பங்கேற்று அதில் பட்டமும் வென்றார். இப்போது தமிழ் பொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் ஒரு நபராக இருக்கிறார்.
அர்ச்சனா ரவிச்சந்திரன் (சீசன் 7 வெற்றியாளர்)
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமடைந்து பின்னர் பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்றார் அர்ச்சனா ரவிச்சந்திரன். இந்த சீசனில் பட்டத்தையும் வென்றார். பின்னர் வெள்ளித்திரையில் டிமான்டி காலனி 2 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தி வருகிறார்.
முகமது அசீம் (சீசன் 6 வெற்றியாளர்)
மாயா, பிரியமானவள் மற்றும் பகல் நிலவு ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவார் அசீம். இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்டார். அதில் பட்டத்தையும் வென்றார். தற்போது, ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் ஒரு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.
ராஜு ஜெயமோகன் (சீசன் 5 வெற்றியாளர்)
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜு மோகன் அதில் பட்டத்தையும் தட்டிச் சென்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஆரி அருஜுனன் (சீசன் 4 வெற்றியாளர்)
கடந்த 2014 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டார். இதில் பட்டத்தையும் வென்றர். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
முகேன் ராவ் (சீசன் 3 வெற்றியாளர்)
பிக் பாஸ் சீசன் 3-ல் பட்டத்தை தட்டிச் சென்றவர் முகேன் ராவ். மலேசியவைச் சேர்ந்த பாடகரான இவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் வேலன் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
ரித்விகா (சீசன் 2 வெற்றியாளர்)
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர ரித்விகா. இவர் பிக் பாஸ் சீசன் 2 இல் பட்டத்தை வென்றார். தற்போது எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஆரவ் நபீஸ் கிசர் (சீசன் 1 வெற்றியாளர்)
பிக் பாஸ் முதல் சீசனிலேயே பட்டத்தை வென்றவர் ஆரவ். இதனைத் தொடர்ந்து மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்தார். இப்போது மாடலிங் மற்றும் பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார்.