தமிழைத் தவிர்த்து இந்த ஆண்டு இந்தி , மலையாளம், தெலுங்கு , ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி துவன்கியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 வரும் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அதே நேரம் கன்னடத்தில் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 12 வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தி , மலையாளம் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்வுகள் அன்றாடம் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகை தனுஶ்ரீ தத்தா பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்த தனுஶ்ரீ தத்தா
விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தனுஶ்ரீ தத்தா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ள மறுத்தது குறித்து அவர் பேசினார் " கடந்த 11 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அழைக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் அவர்களை திட்டிவிடுகிறேன். அந்த மாதிரியான இடத்தில் என்னால் இருக்க முடியாது. நான் என் குடும்பத்துடனேயே சேர்ந்து இருப்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு ரூ 1.65 கோடி தருவதாக சொன்னார்கள். இதற்கு மேலேயும் பணம் தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். நிலாவையே தருவதாக சொன்னாலும் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன். ஆண்களும் பெண்களும் ஒரே படுக்கையில் படுத்து , சண்டைப் போட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக ஒரே ஆணுடம் ஒரே படுக்கை படுக்கும் பெண் என்று என்னை எப்படி நினைக்கலாம். நான் அவ்வளவு சீப்பான பெண் இல்லை. அதுமட்டுமில்லாமல் நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பவள். எத்தனை கோடி கொடுத்தாலும் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன்" என்று தனுஶ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் 9
பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்பது வரும் அக்டோபர் 5 முதல் துவங்க இருக்கிறது. இரண்டாம் ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஜியொஸ்டார் மற்றும் விஜய் தொலைகாட்சியில் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியை ரசிகர்கள் காணலாம் .