விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு கெமி சரியான நபர் இல்லை என்று விஜே பார்வதி கூறியுள்ளார். அதோடு அதற்கான காரணத்தையும் அவர் பிக் பாஸ்-யிடம் சொல்லி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 9:
கடந்த வாரம் முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆக போகிறது. பிக் பாஸ் சீசன் 9- ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடலிங் துறையைச் சேர்ந்த அரோரா சின்கிளேர், ராப் பாடகர் FJ , வி.ஜே பார்வதி , கொரியன் பாய் துஷார், குக் வித் கோமாளி கனி, வேலைக்காரன் சீரியல் நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, குக் வித் கோமாளி கெமி, பிகில் பட நடிகை ஆதிரை, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத்,விமானப் பணிப் பெண் வியானா, சின்ன மருமகள் சீரியல் நடிகர் பிரவீன், மீனவ பெண் சுபி,திருநங்கை அப்சரா, ஸ்டாண்ட் அப் காமெடியனான விக்ரம், மகாநதி சீரியல் நடிகர் கம்ரூதின், அகோரி கலையரசன் என மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ளனர்.
கெமிக்கு எதிராக வி.ஜே.பார்வதி:
இந்த நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதியில்லாத நபர்கள் யார் என்பது தொடர்பான ஒரு விவாதம் நடந்தது. இதில் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு கெமி சரியான நபர் இல்லை என்று வி.ஜே.பார்வதி கூறியுள்ளார். அதாவது வி.ஜே.பார்வதி பேசுகையில் முதலில் பிரவீன் காந்தி மற்றும் வினோத் பெயரைத்தான் சொன்னார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு பிக் பாஸிடம் மீண்டும் பேசுவதற்கு நேரம் கேட்டார்.
இதனைத் தொடர்ந்து கெமி பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கான ஆள் இல்லை என்று சொன்னார். அதாவது கடந்த முறை நடைபெற்ற ஒரு டாஸ்கின் போது கெமி தன்னை தாக்கியாதில் தனக்கு அடிபட்டிருக்கிறது. கெமி வன்முறையில் ஈடுபடுகிறார் அதனால் அவரை நான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புவேன் என்று கூறியுள்ளார் வி.ஜே.பார்வதி.