விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த சீசனில் வாாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, சபரி, அரோரா என பலரும் பங்கேற்றுள்னர்.
சாப்பாட்டிற்காக சண்டை:
காமெடி, சண்டை என விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சீசனில் பலரது ஆதரவைப் பெற்ற நபராக மாறி வருகிறார் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சாப்பாட்டிற்காக நடந்த சண்டை வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது, சாப்பாட்டை ஒரு தரப்பினர் பரிமாற வேண்டும் என்று ஒவ்வொரு சீசனிலும் அணி, அணியாக பிரித்து டாஸ்க் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய சீசனில் சபரி மற்றும் சில போட்டியாளர்கள் சாப்பாடு பரிமாறியபோது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பசி எடுக்கும்போதுதான் சாப்பிடனும்:
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் சபரியிடம், நியாயம் என்று ஒன்று உள்ளது. நல்லா சாப்பிட்றவங்க கூட சாப்பிடமாட்டாங்க. என்ன மாதிரி எல்லாரும். வாயைத் திறந்து கேக்கமாட்டாங்க என்றார்.
அப்போது, போட்டியாளர் வினோத் மீதமான பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாமா? என்றார். அதற்கு திவாகர் மீதமான பிறகு சாப்பிட்டு என்ன பிரயோஜனம்? பசி எடுக்கும்போதுதான் சாப்பிட வேண்டும் என்றார்.
ஆளு பாத்து சாப்பாடு போட்றாங்க:
அப்போது, சபரி இன்னும் 7 பேர் சாப்பிடாமல் இருக்கின்றனர். நீ சாப்பிட்டியா? இல்லையா? என்று ஆவேசமாக தன்னைத் தடுத்த எஃப்.ஜே.விடம் கேட்டார். அவங்க அவங்க தனிப்பட்ட வஞ்சகத்தை சாப்பாட்டில்தான் காட்டுகின்றனர். ஆள் பாத்து சாப்பாடு வைக்குறாங்க. இவ்வாறு திவாகர் ஆவேசமாக பேசிச் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் திவாகருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சக போட்டியாளர்களால் தொடக்கம் முதலே ஓரங்கட்டப்பட்டு வரும் திவாகருக்கு ரசிகர்கள் மத்தியில் அனுதாப அலை எழுந்துள்ளது. இதனால், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.