விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக அனைவராலும் அறியப்பட்டவர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்.

Continues below advertisement

வாட்டர்மெலன் ஸ்டார்:

அவரது சர்ச்சைக்குரிய பேட்டிகள், யூ டியூப் சர்ச்சைகள் ஆகியவற்றால் அளவுக்கு அதிகமாக விமர்சிக்கப்பட்டவர். இவரை பிக்பாஸ் சீசனில் களமிறக்கியபோது பலரும் இவரை மிக கடுமையாக அனைவரும் விமர்சித்தனர். 

ஆனால், கடந்த ஒரு வாரத்தில் இவரது நடவடிக்கைகள், சக போட்டியாளர்கள் சிலர் இவரை நடத்திய விதம் இவர் மீது ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தையும், ஆதரவையும் அதிகரிக்க வைத்தது. மேலும், இவரிடம் உள்ள சில நல்ல குணங்களையும் வெளிக்காட்ட இது உதவியது.

Continues below advertisement

திவாகராக மாறிய விஜய் சேதுபதி:

இந்த நிலையில், இந்த வார ப்ரமோவில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் போலவே நடித்துக் காட்டினார். என்னை எல்லாருக்கும் தெரியும் தமிழ்நாட்டில். மக்கள் ஆதரவு எனக்கு இருக்கு என்று திவாகர் மாதிரியே விஜய் சேதுபதி செய்து காட்டினார்.

பின்னர், திவாகரிடம் வாட்டர்மெலனா? இல்லை முந்திரிக் கொட்டையா? என்று விஜய் சேதுபதி கேட்டதும் அனைவரும் சிரித்தனர். பின்னர், உங்களிடம் ஒரு முத்தம் வாங்கவில்லை என்றுதான் வருத்தம் என்று திவாகர் விஜய் சேதுபதியிடம் கூறினார். 

புகழ்ந்த விஜய் சேதுபதி:

அப்போது, விஜய் சேதுபதி நீங்க எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா? நான்தான் கவலைபடனும். உங்களை பாத்ததுல இருந்து எனக்கு தூக்கம் இல்லாம இருக்குது என்றார். இதைக்கேட்ட அனைவரும் சிரித்தனர்.

இந்த சீசனின் தொடக்கத்தில் எவிக்ஷன் பட்டியலில் திவாகர் பெயர் இருந்த நிலையில், அவர் ரசிகர்களின் வாக்குகளால் தப்பித்தார். முதல் வார எவிக்ஷனில் போட்டியில் இருந்து வெளியேறுபவராக இயக்குனர் ப்ரவீன்காந்தி அறிவிக்கப்பட்டார். மேலும், போட்டியாளராக களமிறங்கிய நந்தினி தானாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் இந்த சீசனில் விஜய் சேதுபதி விஜே கம்ரூதினின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தார். தற்போது இந்த ப்ரமோ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.