பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனில் இருந்து முதல் வார எலிமினேஷனுக்கு முன்பே நந்தினி வெளியேறியுள்ளது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் தனிப்பட்ட முறையில் தன்னை பாதிப்பதாகவும் இதனால் தான் இந்த பொய்யான இடத்தில் இருக்க விரும்பவில்லை என நந்தினி கூறியதைத் தொடர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல பிக்பாஸ் அனுமதி வழங்கினார். வெளியே செல்வதற்கு முன்பு நந்தினி தன்னைப் பற்றியும் தனது கஷ்டங்கள் பற்றியும் பேசிய வீடியோ தற்போது மறுபடியும் பார்வையாளர்களிடம் கவனம் பெற்று வருகிறது
யார் இந்த நந்தினி ?
கோயம்புத்தூரில் பிறந்த வளர்ந்த நந்தினியின் தந்தை விபத்தில் உயிரிழந்தார். அவரது அண்ணை கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். மனவுளைச்ச்சலில் இருந்து வெளியே வருவதற்காக தீவிரமாக யோகா பயிற்சி செய்துவந்தார் நந்தினி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி பேசுகையில் நந்தினி இப்படி கூறினார் " 2018 ஆம் ஆண்டு என் கண் முன்னாள் என் அம்மா இறந்தார். அப்போதும் யாரும் என் கூட நிக்கல. அவ்வளவு வலியிலும் வேதனையிலும் என் தம்பிக்காக மட்டும் தான் நான் வாழ்ந்தேன். ஒரு பெண்ணாக இருந்து இந்த சமுதாயத்தில் எல்லா பிரச்சனைகளையும் நான் சந்தித்திருக்கிறேன். ஒரு பாசத்திற்காக எங்கினாலும் எல்லாரும் ஏதோ ஒன்றை நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். அந்த உண்மையான அன்பும் பாசமும் எங்கேயும் எனக்கு கிடைக்கல." என நந்தினி பேசியது பலரது மனதை கலங்கடித்தது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு நந்தினி கட்டுப்பாட்டை இழந்து கதறி அழுதார் " இந்த வீட்டிற்கு வந்த பின் தான் நான் எல்லாரையும் பார்த்து சிரிக்கவே செய்கிறேன். என் வாழ்க்கையில் நான் இதுவரை இப்படி சிரித்ததே கிடையாது. " என நந்தினி கனியிடம் அழுதபடி கூறினார்.
நந்தினிக்கு அதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்
ஒருபக்கம் நந்தினி கவனமீர்க்க இப்படியெல்லாம் செய்வதாக சமூக வலைதளங்களில் பலர் அவரை விமர்சித்து வந்தாலும் இன்னொரு தரப்பினர் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார். தனது மன நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நந்தினி முடிவு செய்த முடிவு பாராட்டிற்குரியது என்று பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.