Bigg Boss 8 Host : கமல் இல்லாட்டி யாரு? பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியோட ஹோஸ்ட் இவர்தானா?

Bigg Boss 8 Host : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க முடியாத காரணத்தால் அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்க போகிறார் என்பது குறித்து பல செய்திகள் உலா வருகின்றன. 

Continues below advertisement

விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் துவங்கிய நாள் முதல் அதை கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பவர்களும் உண்டு. 

Continues below advertisement

 

தெலுங்கில் நாகார்ஜுனா, கன்னடத்தில் கிச்சா சுதீப், மற்றும் மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்கள். மற்ற தென்னிந்திய பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ஸ்டார் நடிகர்கள் தொகுத்து வழங்கி வந்தாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டிஆர்பி வரிசையில் முன்னிலையில் இருந்து வந்தது. அதற்கு மிக முக்கியமான காரணம் கமல் மட்டுமே. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  அதில் வர இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவதில் இருந்து சிறிய பிரேக் எடுக்க போவதாக அறிவித்து இருந்தார். மேலும் திரைப்படங்களின் கமிட்மெண்டால் அதை தொகுத்து வழங்க முடியாது என்றும் அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து இருந்தார். விஜய் டிவி, போட்டியாளர்கள் என அனைவரும் நன்றிகளை அறிக்கையின் மூலம் தெரிவித்து கொண்டார். 

 

நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் இந்த ஆண்டுக்கான சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்  என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. சமூக வலைத்தளம் எங்கும் யார் அடுத்த ஹோஸ்டாக இருப்பார்கள் என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த லிஸ்டில் ஏற்கனவே சில பிக் பாஸ் எபிசோட்களை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் பெயரும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிம்பு பெயரும் அடிபடுவதுடன் புதிதாக நடிகர் பார்த்திபன், விஜய் சேதுபதி பெயர்களும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில நடிகர்களிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் பிக் பாஸ் சீசன் 8 துவங்க இருப்பதால் ஹோஸ்ட்டை வேகவேகமாக தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது விஜய் டிவி. அந்த வகையில் வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் அது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

Continues below advertisement