Bigg Boss 8 Contestants : பிக்பாஸ் 8 ஆடிஷன் ஆரம்பிச்சாச்சு!  யார் யார் போட்டியாளர்களாக இருக்கலாம்... 

Bigg Boss 8 Contestants : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில் அதற்கான போட்டியாளர்கள் தேர்வுக்கான ஆடிஷன் நடைபெற்று வருகிறது. யார் யார் போட்டியாளர்களாக இருக்கலாம்?

Continues below advertisement

விஜய் டிவியில் அதிக அளவிலான ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 7 சீசன்களாக மிகவும் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தி வரும் இந்த நிகழ்ச்சி சிறந்த ஒரு என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. முதல் சீசன் முதல் 7-வது சீசன் வரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் வரவிருக்கும் பிக்பாஸ் சீசன் 8  நிகழ்ச்சியையும்  அவரே தொகுத்து வழங்க வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பமாக இருக்கிறது. 

Continues below advertisement

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் சில மாதங்களில் தொடங்க இருப்பதால் அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களுக்கு ஆடிஷன் நடைபெற்று வருகிறது.  

அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமும் காத்திருக்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள். 

அந்த வகையில் ரசிகர்களுக்கு ஒரு இன்பமான செய்தியாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் சில வைரலாகி வருகின்றன. பெரும்பாலும் விஜய் டிவியை சுற்றியே ஒரு சில போட்டியாளர்கள் இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் அதிக அளவிலான பிரபலத்தை பெற்ற ஜோயா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படி அவர் தேர்ந்து எடுக்கப்பட்டால் அவரின் பாய் ப்ரெண்ட் டிடிஎஃப் வாசனும் கலந்து கொள்ள கூடும். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் கலந்து கொள்வதாக பேச்சுக்கள் அடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பின்னணி பாடகி சுசித்ரா கலந்து கொண்ட நிலையில் இந்த சீசனில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. மார்க்கெட் இழந்த நடிகைகள் சிலர் மீண்டும் அவர்களின் முகத்தை ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு படையெடுப்பார்கள். அந்த வரிசையில் பூனம் பஜ்வா,  கிரண் மற்றும் சோனியா அகர்வால் கலந்து கொள்ள உள்ளனர் என சொல்ல படுகிறது. 

பிக் பாஸ் சீசனில் உமா ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஏற்கனவே கலந்து கொண்ட நிலையில் இந்த சீசனில் அவரது கணவர் ரியாஸ் கான் கலந்து கொள்ள கூடும் என சொல்லப்படுகிறது.

இது தவிர விஜய் டிவியில் செல்ல குட்டி தொகுப்பாளர் மாகாபா, ரோபோ ஷங்கர் அல்லது அவரின் மகள் இந்திரஜா ஷங்கர், ஷகீலா, ஸ்வேதா மோகன், குக்கு வித் கோமாளி அன்ஷிகா, அஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள கூடும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு சீசனிலும் சீனியர் போட்டியாளர் யாராவது இருப்பார்கள். அந்த வகையில் இந்த முறை நடிகர் விஜயகுமார் அல்லது பப்லு கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலின் படி மட்டுமே இவர்களாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது உறுதியான தகவல் அல்ல. அதிகாரபூர்வமான தகவல் வெளியானால் மட்டுமே போட்டியாளர்கள் குறித்த தகவல் உறுதியாகும்.

Continues below advertisement