ஒவ்வொரும் ஆண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 8ஆவது, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. கமல் ஹாசன் வெளியேறியதால் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார். 


ஆரம்பத்தில் இருந்தே மிகவும் நேர்த்தியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, போட்டியாளர்களை பேச விடுவது இல்லை என இவர் மீது விமர்சனம் ஒன்றும் முன்வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி சற்று போர் அடித்தாலும், பின்னர் ரசிக்கப்பட்டது. கடந்த சீசனை போல் டாக்சிக்காக இல்லாமல், போட்டியாளர்கள் நிதானமாக இந்த முறை தங்களின் விளையாட்டை விளையாடினார்கள்.



Bigg Boss Title Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்; டிராஃபியோடு ரொக்க பணத்தை தட்டி தூக்கியது யார் தெரியுமா?


இப்போது தான் பிக்பாஸ் ஆரம்பித்தது போல் இருந்தாலும்...  அதற்குள்ளாக 100 நாட்களை தாண்டி விட்டது. நாளை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஒளிபரப்பாக உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு தொடங்கப்படும் இந்த நிகழ்ச்சியின் முக்கியமான தருணமே டைட்டில் வின்னர் யார் என்பதை ரசிகர்களுக்கு அறிவிப்பது தான்.


வைல்டு கார்டு எண்ட்ரி சேர்த்து மொத்தமாக 24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில், கடைசியில் 5 போட்டியாளர்கள் தான் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர். அவர்களில் வைல்டு கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த ரயானும் ஒருவர். நேரடியாக டிக்கெட் டூ ஃபினாலே மூலமாக இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்தார்.




இவரைத் தொடர்ந்து முத்துக்குமரன், விஷால், பவித்ரா மற்றும் சவுந்தர்யா ஆகியோரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு வந்தனர். இந்த நிலையில் தான் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த முத்துக்குமரன் வோட்டிங்கில் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து 2ஆவது இடத்தில் வாக்குகள் அடிப்படையில் சவுந்தர்யா இருக்கிறார். 3ஆவது இடத்தில் விஷால், 4ஆவது இடத்தில் ரயான் மற்றும் 5ஆவது இடத்தில் பவித்ரா ஆகியோர் உள்ளனர்.  


இந்நிலையில் பிக்பாஸ் பைனலுக்கான ஷூட்டிங் இன்று முடிந்த நிலையில், அதில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து விஜே விஷால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக, மூன்றாவது இடத்தை சௌந்தர்யா பிடித்துள்ளார். நான்காவது இடத்தை ரயானும், ஐந்தாது இடத்தை பவித்ராவும் பிடித்துள்ளனர். மொத்தத்தில் பணப்பெட்டி டாஸ்கில் போட்டியாளர்கள் எடுத்த 10 லட்சம் ரொக்கம் போக, மீதம் இருந்த 40 லட்சம் பணம் மற்றும் கோப்பையை முத்து குமரன் தான் தட்டி தூக்கி உள்ளார்.