பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விஜய் சேதுபதி வெற்றிகரமாக தனது முதல் சீசனை முடிக்க உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த முறை மொத்தம் 24 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். அதே போல் அதிகம் டபுள் எவிக்ஷன் நடந்த சீஸனும் இது தான். இறுதியாக இப்போது வெறும் 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே ராயன் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலமாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டார். எனினும் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது முத்துகுமரன், சவுந்தர்யா, விஷால், பவித்ரா ஆகிய போட்டியாளர்கள் மட்டுமே இப்போது டைட்டில் வின்னருக்காக தயாராகி இருக்கின்றனர்.
இதில், சவுந்தர்யா அல்லது முத்துக்குமரன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை ஜெயிக்க வைக்க அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால் பாக்ஸில் 10 இலக்க எண் கொண்ட மிஸ்டு கால் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் இது அவருடைய ஃபெர்சனல் நம்பர் தான் என்று கருதி கால் செய்வதெல்லாம் அவருக்கு ஓட்டாக மாறி வருவதாக சனம் ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: சவுந்தர்யாவின் காதலரான விஷ்ணுவும் தன் பங்கிற்கு வாக்கு சேகரிக்கிறார். அதாவது, பிக் பாஸில் மிஸ்டு கால் நம்பரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவசரம் என்று பதிவிட்டு இந்த நம்பருக்கு கால் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் அந்த நம்பருக்கு கால் செய்யவே அது சவுந்தர்யாவிற்கு ஓட்டாக மாறியதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டிங் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் வெளியேற்றப்படுவதும், தக்க வைக்கப்படுவதும் நடந்து வந்த நிலையில், கடைசியில் ஓட்டிங் அடிப்படையில் தான் டைட்டில் வின்னரும் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அப்படி டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்பட இது அவருக்கு சாதமாக மாறியுள்ளது. ஒருவேளை சவுந்தர்யா டைட்டில் வின்னராக வந்தால் கண்டிப்பாக இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். மேலும், பணப்பெட்டி டாஸ்கில் முத்துக்குமரன், பவித்ரா, ராயன், விஷால் ஆகியோர் முறையே ரூ.50, 000, ரூ.2,00,000, ரூ.2,00,000 மற்றும் ரூ.5,00,000 என்று ஜெயித்து பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். ஆனால், இந்த டாஸ்கில் பங்கேற்ற சவுந்தர்யா மட்டும் பாதியோடு திரும்பி வீட்டிற்குள் வந்தார். அவர் பணப்பெட்டியை எடுத்துவரவில்லை. ஆதலால், பிக் பாஸ் தமிழ் சீசன்8 நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.