Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் 50 நாட்களை நெருகும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது. கடந்த வாரம் ஐஷூ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் ஐஷூவும் நிக்சனும் அதிகமாக பேசிக் கொண்டிருந்ததாக சக போட்டியாளார்களே பேசினர். இந்த நிலையில் ஐஷூ வெளியேற்றப்பட்டதற்கு விசித்ரா தான் காரணம் என அவருடன் நிக்சன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். 

 

நேற்றைய எபிசோடில், கேம் என்றால் என்னனு தெரியவில்லை என்று கூறிவிட்டு, பக்காவா கேம் விளையாடுவதாகக் கூறி விசித்ராவிடம் சண்டைக்கு சென்றார் நிக்சன்.  ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போனதுக்கு விசித்ரா தான் காரணம் என்ற தன்னையும் ஐஷூவையும் லவ்வராக விசித்ரா புரெஜெக்ட் செய்வதாக கூறினார். அதற்கு பதிலளித்த விசித்ரா, ”ஐஷூவிடம் ஒரு மகளாக நிக்சனிடம் பேசி உன் கேமை ஸ்பாயில் செய்யாதே எனக் கண்டித்தேன்” என்றார்.  “ஐஷூவை வெளியே அனுப்பிட்டே” என்று கேட்டார். 

 

தொடர்ந்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஐஷூ வெளியே போனது தான் உனக்கு ஆத்திரம் என விசித்ரா கூற, அதற்கு நிக்‌ஸனோ, ஐஷூவை ஏன் டேமேஜ் செய்தீர்கள் என்று கோப்பட்டார். அப்போது பேசிய விசித்ரா, ஸ்ட்ரேட்டர்ஜிக்காக தான் ஐஷூ நிக்சனிடம் பேசியதாக விசித்ரா குத்தி காட்டினார். மேலும்,  உன்னால தான் ஐஷூ போனால் என விசித்ரா கூறியதும், டென்ஷனான நிக்சன், ”உனக்கு மரியாதை கொடுக்க முடியாது என்று கூறியதுடன், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கோ” என்றார். மேலும், நான் ஐஷூவுடன் பேசுவது தப்பு என்றால் மணி, ரவீணா மற்றும் பூர்ணிமா, விஷ்ணு பேசுவதும் தப்பு தான் என்றார். 

 

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஐஷூ வெளியானதுக்கு தான்  காரணம் என நிக்சன் குற்றம்சாட்டுவதாக கமல்ஹாசனிடம் விசித்ரா முறையிடுகிறார். மேலும் தன்னை சார் என நிக்சன் கூறுவதாக விசித்ரா முறையிட, அதற்கு கோபப்பட்டீர்களா நிக்சன் என கமல்ஹாசன் கேட்கும் புரோமோ வைரலாகி வருகிறது. 

 





இதனால், இந்த வார இறுதியில் போட்டியாளர்களை சந்திக்க வரும் கமல்ஹாசனிடம் பல பஞ்சாயத்துகள் இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.