Big Boss 7 Tamil : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபரில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் மாதம் விறுவிறுப்பு இல்லாமல் சென்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 2 வாரங்களாக சர்ச்சை, சண்டை, வாக்குவாதம், அழுகை, கோபம் என ஒட்டுமொத்தமாக காட்டி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கடந்த வாரத்திற்கு முன்பு பிரதீப் வெளியேற்றப்பட்டதில் இருந்து பிக்பாஸ் வீட்டிலும், இணையதளத்தில் சர்ச்சைகள் ஓயாமல் இருந்தன. இதனால், கடந்த வார வீக்கெண்ட் எபிசோடில் பேசிய கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் எண்ட் கார்டு கொடுத்து பிரதீப் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் சண்டைபோட்டு எபிசோடை பார்க்க வைத்த மாயா மற்றும் பூர்ணிமா இந்த வாரம் முழுவதும் அமைதியாக இருக்க, அவர்களுக்கு பதிலாக தினேஷ், விஷ்ணு இடையே மோதல் ஏற்பட்டது. சீக்ரெட் டாஸ்கில் வேடித்த சண்டை வைரலானது.
இந்த நிலையில் நாளை கமல்ஹாசன் வரும் வீக்கெண்ட் எபிசோடுக்கு முன்னாடி இன்றைய புரோமோ வெளியானது. அதில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு வொர்ஸ்ட் போட்டியாளர்களை தேர்வு செய்ய பிக்பாஸ் கூறுகிறார். அப்போது பிளான் பண்ணி வைத்தார்போல், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் எல்லாரும் வொர்ஸ்ட் போட்டியாளர்களாக அர்ச்சனா மற்றும் விசித்ராவை தேர்வு செய்தனர். இதனால் கடுப்பான விசித்ரா, ”ஏண்டா இப்படி முதுகுல எல்லாரும் குத்துனீங்க...எங்களால வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்றதை ஏற்று கொள்ள முடியாது. அதனால் நாங்கள் ஜெயிலுக்கு போக முடியாது” என கூறி பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே படுத்து கொள்கிறார். அந்த பக்கமோ, கேப்டனான தினேஷ் அவர்களை ஸ்மால் ஹவுஸ்க்குள் விடமுடியாது என்றதுடன், அவர்கள் உள்ளே வந்தால் ஜெயில் தான் என கேப்டன்ஷிப் அதிகாரத்தை காட்டுகிறார். இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் வீக்கெண்ட் எபிசோடில் கமல்ஹாசனின் மீண்டும் பஞ்சாயத்து இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Bigg Boss Tamil 7: விசித்ரா பார்ட் 2 பாக்க போறீங்க.. ஒர்ஸ்ட் பெர்ஃபாமர் என முத்திரை குத்திய பிக்பாஸ் குடும்பம்!