பிக் பாஸ் 7 வீக் எண்டு எபிசோட் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. பஞ்சாயத்து செய்து வைப்பதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் இன்று என்ட்ரி கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு கூடிக்கொண்டே இருக்கிறது என்ற பொதுவான கருத்து இருந்து வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 48வது நாளான இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் வந்ததும் தினமும் மாறுவது கேம் அல்ல கூட்டணிகள் தான். புதுசு புதுசா நட்புகள் மலர்கின்றன. மரியாதையை கூவி கூவி கேட்கிறார்கள் என கிண்டலுடன் நிகழ்ச்சியைத் தொடங்குகிறார்.


 




அந்த வகையில் இன்றைய தினத்திற்கான 2வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.


சென்ற வாரம் ஒருவரின் கதாபாத்திரமாக மற்றவர்கள் மாறி அவர்களை போலவே நடை, உடை, பாவனை எல்லாம் மாற்றி சிறப்பாக செய்து வந்தார்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள். அந்த வகையில் விஷ்ணுவின் கதாபாத்திரமாக மாயா நடித்து வந்தார். “மாயா - விஷ்ணுவின் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டார்கள் காரணம் என்ன?” என விஷ்ணுவிடம் கமல் கேட்கிறார். "நான் நெகட்டிவா இருக்கிறேன். பயங்கரமா பின்னாடி பேசுவேன் அப்படின்னு தான் ப்ராஜெக்ட் பண்ணாங்க " என விஷ்ணு சொல்ல, மாயா முகத்தில் ஈ ஆடவில்லை.

கூல் சுரேஷ் அர்ச்சனாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அது குறித்து அர்ச்சனாவிடம் கேட்கையில் "இந்த கேரெக்டர எடுத்து நீங்க ஏன் இவ்வளவு நல்ல பர்ஃபார்ம் பண்ணறீங்க என திட்டெல்லாம் வாங்கி இருக்கார் போல" என அர்ச்சனா சொல்ல "யார் உங்களை திட்டினது சுரேஷ்" என கமல் கேட்க "மணி, விஷ்ணு இவங்க எல்லாரும் தான் திட்டினாங்க" என அவர்களை கூல் சுரேஷ் கோர்த்து விடுகிறார்.





நாங்க இல்ல அவங்க தான் என மணியும் விஷ்ணுவும் மாயா பக்கம் கையை நீட்டுகிறார்கள். மொத்ததில் மாயா வசமாக எல்லா பக்கமும் சிக்கிக்கொண்டார்.

அடுத்த பஞ்சாயத்து விசித்திராவிடம் சென்றது. நிக்சன் தான் விசித்திராவின் கதாபாத்திரத்தை ஏற்று இருந்தார். "என்னுடைய கேரக்டரை நிக்சன் சார் தான் எடுத்து பண்ணார். நான் காட்டும் பாசத்தை ஒரு பொய்யான விஷயமா அவர் ப்ராஜெக்ட் பண்ணது உண்மை தான் சார்" என விசித்திரா தன்னுடைய கருத்தை கூறுகிறார்.


மற்றொருபுறம் இன்றைய போட்டியில் ரவீணா தான் முதலில் சேவ் ஆனதாகவும், வோட்டிங்கின் அடிப்படையில் விசித்ரா தான் மேலோங்கி இருந்ததாகவும் ரசிகர்கள் இணையத்தில் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.



இவர்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு தகுந்த ஒரு பதிலை கொடுப்பாரா கமல்ஹாசன். உண்மையிலேயே பிரச்சினையையும் சர்ச்சையையும் கிளப்பியவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்குமா? இந்த வாரம் எவிக்ட்டாகி செல்லப் போவது யார்? இப்படி பல கேள்விகளுக்கும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விடை அறியலாம்.