பூதாகரமாக வெடித்த நிக்சன் பிரச்னை:
பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுவாகவே பரபரப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் வரும்போது இந்த பரபரப்பு உச்சத்திற்கு செல்லும். போட்டியாளர்கள் போட்டியை தங்களுக்கு சாதகமாக விளையாடவும், போட்டியில் தொடர்ந்து நீடிக்கவும் முன்னேறவும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரத்தில் கடந்த 7ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் நிக்சன் மத்தியில் கடும் வாக்குவாதம் ஆனது.
வாக்குவாதத்தில் நிக்சன் சில வார்த்தைகளை விட, அதற்கு மற்றொரு போட்டியாளரான மணிச்சந்திரன் “ட்ரூ கலர் வெளியே வந்துடுச்சு பாத்தியா” என ரவீனாவிடம் கூறினார். அதேபோல் மற்றொரு போட்டியாளரான தினேஷ் - நிக்சனுடனான வாதத்தில் ‘தௌலத்’ என்ற வார்த்தையை ஒருவித உடல்மொழியுடன் வட்டாரவழக்கிலும் வெளிப்படுத்தினார். இதற்கு நிக்சன் அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
பாரபட்சம் காட்டுகிறாரா கமல்?
இந்நிலையில், நேற்றைய எபிசோட்டில் அர்ச்சனா உரிமைக் குரல் தூக்கிய பின் நிக்சனிடம் விசாரித்தார். அப்போது, 'சொருகிடுவேன்’ எனக் கூறினீர்களே எங்கே சொருகுவீர்கள், இங்கேயா (கமல் தனது வயிற்றினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது மார்பினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது வலது கண்ணை வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் காட்சியைப் போல் காட்டுகின்றார்).
இதற்கு பதலளித்த நிக்சன், "நான் கோபத்தில் சொன்னேன். மன்னிப்பு கேட்கிறேன்" என்றார். இதற்கு கமல், ”இன்னொரு முறை இந்த மாதிரியான வார்த்தைகள் இனி இந்த வீட்டில் பேசக் கூடாது ” என்றார். இதை பார்த்த நெட்டிசன்கள், பிரதீப்புக்கு ரெட் கார்டு, நிக்சனுக்கு மஞ்சள் கார்டா? என நேற்று முதலே கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பிரதீப்பிடம் விளக்கமே கேட்காமல் வெளியே அனுப்பிவிட்டு, நிக்சனுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறாரா? என கமல்ஹாசன் என வசைப்பாடி வருகின்றனர்.
நிக்சனுக்கு அறிவுரை வழங்கிய கமல்:
தொடர்ந்து நேற்றைய எபிசோடில் நிக்சனுக்கு ஸ்டிரைக் கார்டு கொடுத்த பிறகு, தினேஷிடம் ’தௌலத்தா பேசுற’ எனக் கூறினீர்களே அதற்கு என்ன அர்த்தம்? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தினேஷிடம், ’நார்த் மெட்ராஸை (வட சென்னை) கூறுகின்றீர்களா? எனக் கேட்டார். அதற்கு போட்டியாளர் தினேஷ் ஆமாம் என்பது போல் தலையை அசைக்க, உடனே தொகுப்பாளர் கமல், “ அப்படி பிராண்ட் குத்த நீங்கள் யாரு? உங்க ஸ்லாங் மாறியதற்கு காரணம் அதுதான். அவர் (மணி) சொன்ன் ட்ரூ கலர்ஸும் அதுதான். இன்னொரு முறை வன்முறை கூடினால் இந்த கார்டின் கலர் மாறும் ( ஸ்ட்ரைக் கார்டினை கமல் காட்டினார்)” என எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து, "நீங்களும் (நிக்சன்) சில நேரங்களில் உடல் மொழியை மாற்றி பேசுறீங்க. இனி அப்படி நடந்துக் கொள்ளாதீங்க. அர்ச்சனா உங்கள மாறி இல்லாம என்ன பேசுனும்? பேசக்கூடாது என்று வீட்டு பாடம் செய்துவிட்டு வராங்க. நீங்க (நிக்சன்) அதை எல்லாம் யோசிக்கமா தகாத வார்த்தைகளை விடுறீங்க. இந்த மாறி பேசுறதால் உங்கள எப்படி பிராண்ட் பண்ணுறாங்கனு புரிகிறதா? எனக்கு வர கோபத்தை விட உங்களுக்கு நிறைய வரணும்.
குதூகலத்தில் நிக்சன்:
அந்த கோபம், சொறுகிடுவேன் என்று இருக்கக் கூடாது. இனி மாறிடுவேன் என்று காட்டுனும். இந்த உலகம் உங்கள தூண்டிவிட்டு தான் இருக்கும். நீங்க அதையெல்லாம் தாண்டி தான், நீங்க முன்னேறனும். எந்த ஏரியாவில் இருந்தும் கூட, பிஎச்டி, கலைஞர், ரவுடி வரலாம். எதுவாக வரனும் என்பதை நீங்க முடிவு பண்ணுங்க. அதை இன்றைக்கே முடிவு பண்ணுங்க” என்று நிக்சனுக்கு அட்வைஸ் கொடுத்தார் கமல்.
தனக்கு ஆதரவாக கமல்ஹாசன் நின்றதற்கு நிக்சன் மிகவும் சந்தோஷடப்பட்டார். குறிப்பாக, வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் காட்சியைப் போல் கமல்ஹாசன் கண்ணை விரித்து காண்பித்ததை பற்றி குதுகலத்தில் விக்ரமிடம் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் நிக்சனுக்கு ஆதரவு இருந்தாலும், ரசிகர்கள் அவரை விமர்சித்து தான் வருகின்றனர். மேலும், கமல் பாரபட்சமாக செயல்பட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.