பிக்பாஸ் சீசன் 7 மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. இதில் இன்றுடன் 70 நாட்கள் போட்டி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 10ஆம் தேதி வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கடந்த வார கேப்டனான விஷ்ணுவை நோக்கி தொகுப்பாளர் கமல் கேள்விகளை வீசுகின்றார். 


அதில் “ஒரு கேப்டன் எப்படி ஒரு குழுவினருடன் பேசமாட்டேன், ஒரு குழுவினருடன் பேசுவேன் என முடிவெடுக்க முடியும்” என கேட்கின்றார். மேலும் கடந்த வார கேப்டன்சி குறித்து சக போட்டியாளரான விஜய் கேப்டன்சி குறித்து “ கேப்டனே இந்த வாரம் இல்லை” என்கின்றார்.


அதேபோல், கடந்த வாரம் கேப்டனாக இருந்த நிக்சனோ, “இப்படியான கேப்டன்சி இனிமேல் இருக்கக் கூடாது என நினைக்கின்றேன்” எனக் கூறுகின்றார். கடந்த வாரம் நடைபெற்ற 5 ஸ்டார்களுக்கான டாஸ்க்கில் வெற்றி பெற்ற சரவண விக்ரம் ” கேப்டன் ஸ்ட்ரைக் வாங்குவதில்தான் குறியாக இருந்தார்” எனக் கூறுகின்றார். அப்போது மற்றொரு போட்டியாளரான பூர்ணிமா சோகமாக அமர்ந்திருப்பதைப் போல் காணப்படுகின்றார். 


இதற்கு பின்னர் விஷ்ணு, நானே நெறையா பேர்கிட்ட பேசறது இல்லை எனக் கூறுகின்றார். அதற்கு கமல்ஹாசனோ ”ஒரு கேப்டன் எப்படி ஒரு குழுவினருடன் பேசமாட்டேன், ஒரு குழுவினருடன் பேசுவேன் என முடிவெடுக்க முடியும்” எனக் கேள்வி கேட்கின்றார். மேலும் இப்படி நடந்து கொள்வது கேப்டனுக்கு அழகல்ல என்கிறார். மேலும் “பொறுப்பில்லாத நபர்களை ஷாப்பிங்கிற்கு அனுப்புவது குறித்து பேசும் நீங்கள் (விஷ்ணு) நியாயமாகப் பார்த்தால் நீங்கள்தானே போயிருக்கவேண்டும்?” எனவும் கமல் கேள்வி எழுப்பினார். இதற்கு சக போட்டியாளர்கள் கைதட்டி தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தினர். 






இதற்கு முன்னர் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பிய கமல், "உங்கள் வெற்றிக்கு தடையா இருக்கும் ஒரு நபர் யார் என்பதை சொல்லுங்கள்” என்றார். இதற்கு, அர்ச்சனாவின் பெயரை பெரும்பாலான போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.


விக்ரம், நிக்சன், மாயா உள்ளிட்டோ அர்ச்சனா பெயரைக் கூறியுள்ளனர். அதேபோல, அனன்யா மற்றும் நிக்சனின் வெற்றிக்கு தினேஷ் தடையாக இருப்பதாகவும் கூறினர். மேலும், பூர்ணிமாவின் வெற்றிக்கு விஷ்ணு தடையாக இருப்பதாவும், விஷ்ணுவின் வெற்றிக்கு அவரது கோபமே தடை இருப்பதாகவும் கூறினார்.  இதனைத் தொடர்ந்து, என்னுடைய வெற்றிக்கு நான் தடையா இருக்கலாம் என்று அர்ச்சனா கூறியபடி ப்ரோமோ முடிவடைகிறது. 


முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில், ”பிக்பாஸ் வீட்டில் எண்டர்டெயின்மெண்ட் இருக்கா? டாஸ்க்கையாச்சும் சுவாரஸ்யமா பண்ணுறீங்களா? இல்லை. எந்த ஆசைக்கு நீங்க வீட்டிற்கு வந்தீங்க என்ற தடம் மாறி, வன்மம் நிறைந்த  போதையில் இருந்து வெளியே வரமாட்றீங்க.


ஒருவருக்கு ஒருவர் நீங்களே மதிக்கிறது இல்லை. மக்கள் ஏன் மதிச்சு உங்கள பார்க்கணும்.  முட்டாளுக்கு முட்டை என்று சாப்பிடும்போது கூட வன்மத்தை கக்கும் இடத்தில், எண்டர்டெயின்மெண்ட் எப்படி இருக்கும்?" என்று போட்டியாளர்களின் அடுக்கடுக்கான கேள்வி கேட்டபடி ப்ரோமோ முடிகிறது.