பிக்பாஸ் தமிழ் 7


பிக்பாஸ் தமிழின் 7ஆவது சீசன் (Bigg Boss 7 Tamil) கடந்த அக்டோபர் 1ஆம் தொடங்கி 9ஆவது நாளை எட்டியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். கூல் சுரேஷ், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார் , எழுத்தாளர் பவா செல்லத்துரை, ராப் பாடகர் நிக்ஸன், நடிகர் பிரதீப் ஆண்டனி மற்றும் மாயா கிருஷ்ணன், விசித்திரா விஷ்ணு உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலந்துகொண்டார்கள். 


முதல் வார எலிமினேஷன்


இதுவரை ஒன்பது நாட்கள் நடந்துள்ள நிகழ்ச்சியில் போதும் போதும் என்கிற அளவுக்கு வாக்குவாதங்கள், வாய் சண்டைகள், விதிமீறல்கள் நடந்துள்ளன. ஆடையை வைத்து சர்ச்சை, எச்சில் துப்புவது, டாட்டூ போடுவதில் சர்ச்சை, படிப்பு குறித்து ஜோவிகா, பெண்கள் மேக் அப் போடுவது குறித்து பிரதீப் ஆண்டனியின் கருத்து என தினுசு தினுசாக பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதற்கு மத்தியில் தான் முதல் வாரத்தின் எலிமினேஷன் நடைபெற்றது. பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து  மாடல் அனன்யா வெளியேற்றப்பட்டார்.


வெளியேறிய பவா செல்லத்துரை


பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசனால் மிகவும் கெளரவித்து வரவேற்கப்பட்டவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை. இந்த சீசனில் பவா செல்லத்துரை மிக முக்கியமான போட்டியாளராக இருக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், எல்லாருக்கும் ஷாக் கொடுத்தார் பவா செல்லத்துரை. இரண்டாவது வார எலிமினேஷனில் யார் வெளியேறப் போகிறார் என்று அனைவரும் பயந்து இருந்த நிலையில், தாமாக முன்வந்து இதற்குமேலும் ஒரு நாள் கூட தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று தன் விருப்பத்தில் வெளியேறினார் பவா செல்லத்துரை. 


 நன்றி தெரிவித்த அனன்யா ராவ்






யார் வெளியே போனால் என்ன, பிக்பாஸ் வீட்டில் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றன. இந்நிலையில்  முதல் வார எலிமினேஷனின் வெளியேறிய அனன்யா ராவ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சிறிது காலத்திற்கு தான் அந்த வீட்டில் இருந்தாலும் ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவை தனக்கு கொடுத்ததற்காக நன்றியைத் தெரிவித்துள்ளார் அனன்யா. இன்னும் கொஞ்ச நாள் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கும் ரசிகர்கள் ஆதரவளித்திருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க முடியாததால் இந்த வீடியோவை தான் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.