பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரம் குறைவான வாக்குகளை பெற்றதால் அனன்யா எவிக்ட்டாகி வெளியேற, நேற்று உடல் ஒத்துழைக்காத காரணம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை.
முதல் வாரமே வெளியேறிய இருவர்
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இரண்டு பேர் வெளியாகி தற்போது 16 பேர் போட்டியிடுகிறார்கள். அந்த வகையில் 10ஆவது நாளுக்கான இன்றைய 3ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் கடந்த வாரம் சுவாரஸ்யம் குறைவாக இருந்த அக்ஷயா மற்றும் வினுஷாவிற்கு பிக்பாஸ் அரெஸ்ட் வாரண்ட் வழங்கிய நிலையில், இன்றைய எபிசோடில் புதிய டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய புது டாஸ்க்
பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் இரண்டு வீட்டில் உள்ளவர்களும் தனித்தனியாக பங்கேற்கும் இந்த புதிய டாஸ்க் பெயர் கோல்ட் ஸ்டார். இதில் "ஒவ்வொருத்தரும் எந்த விதத்துல மத்த ஹவுஸ்மேட்ஸை விட மக்களை என்டர்டெய்ன் பண்ணி இருக்கீங்கன்னு சொல்லணும்" இது தான் இன்றைய டாஸ்க். சும்மாவே ஹவுஸ் மேட்ஸ் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் குத்தம் சொல்லிகிட்டே இருப்பாங்க. இப்போ இதை டாஸ்கா வேற குடுத்துட்டாங்களா சொல்லவே வேண்டாம்...
இதுவா என்டர்டெயின்மென்ட்
பூர்ணிமா அப்பாவியாய் இருக்கும் ஐஸூவை வம்புக்கு இழுக்கிறார். அதற்கான சரியான பதிலடியை ஐஸூவும் கொடுத்து விடுகிறார். அடுத்து வந்த யுகேந்திரன் “சண்டை போட்டு தான் மக்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை” என சக போட்டியாளர்கள் பாலோ செய்யும் டெக்னிக்கை போட்டு உடைத்தார்.