இன்றைய எபிசோட் தொடக்கத்தில் பிரதீப் - மாயா இடையே கடும் வாக்குவதத்துடன் துவங்கியது. பிரதீப் தன்னுடைய அம்மாவை பற்றி மாயா ஏதோ தவறாக பேசியதாக சொல்ல மாயா அதை கடுமையாக எதிர்த்து குறும்படம் கேட்க போவதாக கூறுகிறார். 


 



குறும்படம் கேட்ட மாயா :


விஷ்ணு, கார்த்திக், பிரதீப், ஐஷு, மாயா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அதில் மாயா என்னால் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியாது. பிரதீப் அங்கே இருப்பதால் எனக்கு சேஃப்டி இல்லாதது போல இருக்கிறது என்று கூறி எஸ்கேப்பாக பிளான் செய்கிறார். பிக் பாஸ் மாயாவை அழைத்து நாங்கள் எந்த நேரமும் உங்களை நானும் எங்கள் டீமும் பார்த்து கொண்டேதான் இருப்போம். நீங்கள் கவலை இல்லாமல் செல்லலாம் என நம்பிக்கை கொடுத்த  பிறகு மாயா ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் செல்கிறாள். 


வெளியேறிய பவா செல்லதுரை :


பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். உடல் ஒத்துழைக்காத காரணத்தாலும், மன உளைச்சல் காரணமாகவும் பவா வெளியேற கோரிக்கை வைக்கிறார். இரவெல்லாம் தூங்காமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டே இருந்தவரை பிக் பாஸ் காலையில் கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பேசுகிறார். பவா தனக்கு நெஞ்சு வலி வருவது போல இருக்கிறது என கூறியதால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்பப்படுகிறார். 


 



நிம்மதியை கெடுக்கும் விஷ்ணு :


விஷ்ணு தொட்டது எடுத்ததற்கு எல்லாம் பிரச்சினை செய்து வீட்டில் இருப்பவர்களின் நிம்மதியை கெடுப்பது போல மற்ற ஹவுஸ் மேட்ஸ் எண்ணுகிறார்கள். இந்த வார கேப்டன் சரவண விக்ரமை அழைத்து தேவையில்லாத கடும் வாக்குவாதம் செய்கிறார். 


நாமினேஷன் ப்ராசஸ் :


அடுத்தபடியாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தனியாகவும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தனியாகவும் நாமினேஷன் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் அக்ஷயா, விசித்திரா, ஜோவிகா, பூர்ணிமா, கூல் சுரேஷ், பிரதீப், விஷ்ணு, மாயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


 



இந்த வார ஷாப்பிங் :


இந்த வாரத்திற்கான ஷாப்பிங் நடைபெற்றது ஹவுஸ் மேட்ஸ் சேர்ந்து கிட்டத்தட்ட 51000 ரூபாய்க்கு பொருட்கள் எடுத்துள்ளனர். இதற்காக டாஸ்க்கை விளையாடி பணத்தை கட்டி ஹவுஸ் மேட்ஸ் பொருட்களை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 


அர்ரெஸ்ட் வாரண்ட்:


கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்வாரஸ்யம் குறைவாக இருந்த இருவருக்கு  முதல்முறையாக அர்ரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் அக்ஷயா மற்றும் வினுஷா. அன்றில் இருந்து நான்கு நாட்கள் அவர்கள் எப்படி ஸ்வாரஸ்யமாக நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களை என்டர்டெயின் செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்து அந்த வாரண்ட் அளிக்கப்படும். 


இது தான் பிக் பாஸ் 7ல் 9ம் நாளின் ஹைலயிட்ஸ்.