தமிழில் ஒளிபரப்பாகிவரும் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ள ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ்தான் (Bigg Boss 7 Tamil). விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டிவிட்டது எனக் கூறலாம். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. 


வழக்கமாகவே ஒவ்வொரு சீசனுக்கும் யாரேனும் இரண்டு பேர் லவ் கண்டெண்டுகள் கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி இந்த சீசனில் லவ் கண்டெண்ட் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டது மணிசந்திராவும் ரவீனாவும். இவர்களுக்கு அடுத்து பார்க்கப்பட்டது பூர்ணிமாவும் விஷ்ணுவும். இதில் விஷ்ணு சில நேரங்களில் பூர்ணிமாவிடம் சண்டை செய்வார் என்பதால் இருவருக்கும் இடையிலான லவ் கண்டெண்ட் என்பது தொடர்ச்சியாக இருக்காது.


ஆனாலும் விஷ்ணு பூர்ணிமாவிடம் பேசும்போதும் பழகும்போதும் மற்றவர்களைவிடவும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்டேன்ஷன் கொடுத்து பேசுவார். இதனாலே இருவருக்கும் இடையில் லவ் இருப்பதைப் போன்று சக போட்டியாளர்களும் கூறிவந்த நிலையில், இவர்களின் நடவடிக்கைகளும் அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தது. 


இந்நிலையில் இந்தவாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள விஷ்ணு உள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அர்ச்சனா மற்றும் மாயா, மின்சாரக் கனவு படத்தில் இடம்பெற்றுள்ள காதலர்களின் மனதை வென்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலை பாடினர். அதற்கு  பூர்ணிமா மற்றும் நிக்‌சன் மிகவும் அற்புதமாக நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதில் நிக்‌சனும் பூர்ணிமாவும் ரொமான்ஸை அள்ளி வீசி நடனமாடியுள்ளனர்.  ஆனால் இதனை ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து வேடிக்கை பார்க்கும் விஷ்ணு மிகவும் பாரிதவிப்புடனும் ஏமாற்றத்துடனும் வேடிக்கை பார்க்கின்றார்.  விஷ்ணு இந்த நடனத்தினை எப்படி பார்க்கின்றார் என்பதை மணிசந்திரா குறுகுறுவென பார்க்கின்றார். இந்தக் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


 






ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற டேன்ஸ் மாரத்தான் டாஸ்க்கின்போது, பருத்திவீரன் படத்தில் வரும், ஐய்யய்யோ பாடலுக்கு விஷ்ணுவின் நெஞ்சில் பூர்ணிமா சாய்ந்து கொள்வதைப் போல இருவரும் ரிகர்சல் எல்லாம் பார்த்து  தயாராக இருந்தனர். இது தெரியாத சக போட்டியாளரும் நடனக் கலைஞருமான மணிசந்திரா, பருத்திவீரன் படத்தில் வரும் கார்த்தி போல் முதலில் ஓடிப்போய் நிற்க விஷ்ணு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.


இதனால் பூர்ணிமா மணிசந்திரா நெஞ்சில் சாய்ந்துகொண்டு நடனமாடினார். அப்போதும் அந்த காட்சியை விஷ்ணு மிகவும் ஏக்கத்துடனும் பரிதவிப்புடனும் மனம் நொந்து பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த நடனம் முடிந்ததும் விஷ்ணு ‘நைஸ்’ எனக் கூறி கைதட்டுகிறார்.  இப்போது நிக்‌சன், பூர்ணிமா நடனமாடுவதையும் மனம் நொந்து வேடிக்கை பார்க்கும் வீடியோ இணையத்தினை ஆக்கிரமித்தது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் விஷ்ணுவின் பெயரும் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.