Bigg Boss Tamil Season 7: தமிழில் பிக்பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ள நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால், இதில் வீக்எண்ட்  நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் எபிசோடுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உள்ளனர். 


இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை விஜய் டிவி வெளியிட்டுள்ள மூன்றாவது ப்ரோமோவில் நாமினேசனில் இருந்து எளிதாக எஸ்கேப் ஆகிவிடும் ரவீனாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ரவீனாவை துவம்சம் செய்கின்றார் கமல். 


அதாவது கடந்த வாரம் நடைபெற்ற டான்ஸ் மாரத்தான் டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு ’ஸ்ட்ரெஸ் பஸ்டராக’ இருந்த ஒரு எப்பிசோட் என்றால் அது டேன்ஸ் மாரத்தான் எப்பிசோட்தான். இப்படி இருக்கும்போது இந்த டாஸ்கில் ஒவ்வொருவருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து தங்களுக்கு பிடித்த நடனங்களுக்கு விருப்பத்தின் பேரில் தொகையைக் கொடுக்கலாம் எனவும், இறுதியில் யாரிடம் அதிக பணம் இருக்கின்றது என்பதை வைத்து அடுத்தக்கட்ட போட்டி நடத்தப்பட்டது.


இப்படியான போட்டியில் போட்டியாளர் ரவீனா தனக்கு வழங்கப்பட்ட தொகையை முழுவதுமாக தனது சக போட்டியாளர் மணிக்கு வழங்கினார். இது குறித்து அவர் கூறும்போது, “நான் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அதனால் தான் அவருக்கு எனக்கு வழங்கப்பட்ட முழு பணத்தையும் கொடுத்தேன். எனக்கு இந்த வீட்டில் உள்ள ஒரே கம்ஃபர்ட் நபர் மணி மட்டும்தான். அதனால்தான் நான் மணிக்கு கொடுத்தேன்” என்பதுபோல் கூறினார். 



இது குறித்து போட்டியாளர்கள் மணி மற்றும் ரவீனாவிடம் கேள்வி எழுப்பியுள்ள கமல், மணிக்காகத்தான் நான் விளையாடுகின்றேன் என ரவீனா  சொன்னாங்களே.. அது சரினு தோணுதா? பரிசு கொடுக்கறதுனு முடிவு பண்ணா.. ஆட்டம் முடியுற வரைக்கும் யார் பரிசுக்கு தகுதியானவங்கனு யோசிக்க வேண்டாமா? புடிச்ச ஆளுக்கு கொடுத்துட்டீங்க.. அதுக்கு பேரு ஃபேவரிடிசம்.


இந்த குழப்பத்தினால் என்ன ஆச்சு அப்படினா.. மணி பங்கெடுக்கவே முடியல.. யாருக்கு திறமை இருக்கோ அவங்க திறமையை வெளிக்காட்ட முடியல. அது புரியாத அளவுக்கு குழந்தையா நீங்க? யூ பிகமிங் த ஸ்பாய்லர் இன் திஸ் ஹவுஸ்” என மிகவும் கடுமையாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு மணியும் ரவீனாவும் என்ன சொல்வது எனத் தெரியாமல் திணறுகின்றனர். 


கமலின் இந்த கேள்விக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதும் வீட்டில் மாயா - பூர்ணிமா  ஃபேஃபரிடிசம் குறித்து பேசும் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் கமல் இப்போது முதல் முறையாக ரவீனா - மணி ஃபேஃபரிடிசம் குறித்து பேசியுள்ளது வரவேற்கத்தக்கது என கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.