பிக்பாஸ் சீசன் 7:


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 76ஆவது நாளை எட்டியுள்ளது. ஓவ்வொரு வாரமும் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சீசன் 7 சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர்.


மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா ஆகியோர் உள்ளனர்.  இந்த வாரத்தில் சண்டை இருந்தாலும், எண்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது.


கடந்த இரண்டு தினங்களாகவே ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் நடனத்திறமையை தீயாக வெளிப்படுத்தினர். அதேபோல் யாரும் எதிர்பாராத விதமாக, மிட் வீக் எவிக்‌ஷனை பிக்பாஸ் அறிவித்த நிலையில் அனன்யாவை வெளியேற்றினர். 


வெளியேற்றப்படுகிறாரா கூல் சுரேஷ்?


அதேபோல, இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் விஷ்ணு விஜய், நிக்சன், தினேஷ், கூல் சுரேஷ், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியல் கூல் சுரேஷ் வெளியேறப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.


குறைந்த வாக்குகளைப் பெற்று இந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேற்றப்படுவதாகத் தெரிகிறது. போட்டி தொடங்கிய முதல் இரண்டு வாரங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல் மிகவும் கோளாறாகத்தான் விளையாடி வந்தார். ‘தமிழன்டா’ என கத்திக்கொண்டு இருந்தது நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இடையூறாக இருந்தது.


ஒரு சில வார்த்தைகளை விட்டதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. இப்படியான நிலையில் அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் கூல் சுரேஷின் கேம் ப்ளான் மெல்ல மெல்ல மாறியது. அதாவது மற்ற போட்டியாளர்கள் கேம் ப்ளான் என்பது மற்றவர்களை காலி செய்து மக்கள் மத்தியில் தன்னை மிகவும் திறமையான போட்டியாளர் என வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. ஆனால்,  சில நாட்களாகவே வீட்டை விட்டு வெளியேற  வேண்டும் என்று தொடர்ந்து வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் தெரிவித்து வந்தார் கூல் சுரேஷ். நேற்று முன்தினம் கூட, பிக்பாஸ் வீட்டின் சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்தும் இருக்கிறார். பலமுறை வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கூல் சுரேஷ், இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதாக  தகவல்கள் பரவி வருகிறது. 




மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil: ரச்சிதா பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்பெஷல்.. மனம் திறந்த தினேஷ்.. இன்றைய பிக்பாஸில்!


Bigg Boss Season 7 Tamil: ஒரு பக்கம் எவிக்‌ஷன்.. மறுபக்கம் கொண்டாட்டம்.. 75 நாட்களை நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி..!