தமிழில் பிக்பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ள நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் இதில் வீக் எண்ட்  நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதமஸ்ரீ கமல் ஹாசனின் எபிசோடுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உள்ளனர். 


இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை விஜய் டிவி இரண்டாவது ப்ரோமோவில், பூர்ணிமாவை நோக்கி கமல் எக்கச்சக்க கேள்விகளை தொடுத்து வருகின்றார். அதாவது, மணியிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்த போது, பூர்ணிமா தனது கைகளை உயர்த்துகின்றார்.


அதற்கு கமல், பூர்ணிமா கை தூக்கினீங்களே என்ன? எனக் கேட்கின்றார். அதற்கு பூர்ணிமா, “நீங்க ஸ்கிப் பண்ணி போய்டீங்க சார்” என கூறுகின்றார். இதற்கு கமல், “இது விபத்து இல்லை, என்ன வேணாலும் நீங்க சொல்லுவீங்க, நான் கேட்டுப்பனா? சொல்லுங்க? ஏய்.. பூ கொண்டு வாங்கப்பா.., யார் தலையில வெக்கறதுனு நீங்க சொல்லி முடுச்சதும்தான் முடிவு செய்யணும்.


எங்க காதுல வெக்க முடியாது.. ஏன்னா நாங்க 3 கோடி பேர். உங்களுடைய திட்டம் வந்து நான் கேட்கும்போது பொய் சொல்லி சமாளுச்சுக்கலாம் என நினைக்கிறீங்களா? எனக் கேட்கின்றார். மிகவும் அதிர்ச்சியுடன் காணப்படும் பூர்ணிமா, “ பொய் சொல்லணும்னா என்னவேணா சொல்லி சமாளிச்சுக்கலாம்” என பேசிக்கொண்டு இருக்கும்போது கமல் இடைமறித்து “இப்ப நீங்க அதைத்தான் செய்யறீங்களா?” எனக் கேட்கின்றார். இதற்கு பிக்பாஸ் செட்டில் கூடியுள்ள ரசிகர்கள் கைத்தட்டுகின்றார்கள். இப்படியாக முடிகின்றது இன்றைய இரண்டாவது ப்ரோமோ. 






ஆனால் கமல் இதுவரை மாயாவிடம் அவரின் நடவடிக்கைகள் குறித்தோ அல்லது அவரின் கமெண்ட்ஸ் குறித்தோ எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் இருக்கின்றார் என பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது மட்டுமில்லாமல் பூர்ணிமாவும் மாயாவும் இணைந்துதான் ‘பல யுக்தி’களை கையில் எடுக்கின்றனர். அப்படி இருக்கும்போது கமல் எப்போதும் பூர்ணிமாவை டார்கெட் செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். 


தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவுக்கு பிக்பாஸ் ரசிகர்களில் ஒருவர், “ பூர்ணிமாவிடம் சமாளிப்பு முறையை பற்றி கமல் சாரின் உரையாடல்... எதிர்பாராதது... ஆனால் அருமை” எனவும்  மற்றொருவர், ”யாரும் ஷாக் ஆக வேண்டாம் ப்ரோமோ அப்படிதான் இருக்கும் ஆனா உள்ள ஒண்ணும் இருக்காது” எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் மற்றொருவர் “ பூர்ணிமாவை இவ்வளவு கேள்வி கேட்கும் கமல் ஏன் மாயாவை கேட்க மறுக்கிறார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.